மலை­ய­கத்தில் பெய்துவரும் அடை மழை கார­ண­மாக தல­வாக்­கலை பேர்ஹாம் தோட்­டத்தில் ஏற்­பட்ட வெள்­ளத்­தினால் 09 குடும்­பங்­களைச் சேர்ந்த 44 பேர் வெளி­யேற்­றப்­பட்­டுள்­ளனர்.

தல­வாக்­கலை பேர்ஹாம் தோட்­டத்தில் கடந்த 19ஆம் திகதி  ஏற்­பட்ட வெள்­ளத்­தை­ய­டுத்து  மறுநாள் 20ஆம் திகதி  மர­மொன்று  முறிந்து வீழ்ந்­ததில் வீடுகள் பகு­தி­ய­ளவில் சேத­ம­டைந்­துள்­ள­தாக பாதிக்­கப்­பட்ட மக்கள் தெரி­வித்­தனர். 

வெள்­ளத்­தினால் சுமார்  9 வீடுகள் பாதிக்­கப்­பட்­டுள்­ளன. எனினும் உயி­ரா­பத்­துகள் எதுவும் இல்­லை­யெ­னவும், சில பொருட்கள் மட்டும் சேத­மா­கி­யுள்­ள­தாக பாதிக்­கப்­பட்ட மக்கள் தெரி­வித்­தனர்.

இதன்­கா­ர­ண­மாக இக்­கு­டி­யி­ருப்பில் வசித்து வந்த 44 பேர் பாதுகாப்பாக வெளி­யேற்­றப்­பட்­டு  தோட்ட சிறுவர் நிலை­யத்தில் தற்­கா­லி­க­மாக  தங்கவைக்­கப்­பட்­டுள்­ளனர். பாதிக்­கப்­பட்ட  44 பேரில்  9 ஆண்கள், 12 பெண்கள், 23 சிறுவர்கள் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.