கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திற்கு முன்பகுதியில் உள்ள நூலகத்திற்கு சொந்தமான காணியின் பகுதி இராணுவத்தினரால் பிரதேச சபைக்கு கையளிக்கப்பட்டிருந்த நிலையில் தற்பொழுது குறித்த பகுதியில் தளபாட கடை ஒன்றை நடத்துவதற்கு மொரட்டுவை பகுதியை சேர்ந்த பெரும்பான்மை இனத்தவர் ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ளது 

கிளிநொச்சி மாவட்டத்தை பொறுத்தவை முன்னாள் போராளிகள் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் , மக்கள் நல அமைப்புக்கள் என பலர் நிலத்திற்கான கோரிக்கைகளை வழங்கியுள்ள நிலையில் குறித்த காணி செல்வாக்கின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது 

இது  தொடர்பில்  ஊடகவியாளர் ஒருவர் தவிசாளரிடம்  கேள்வி எழுப்பிய போது நூலகத்திற்குரிய காணியில் பகுதி ஒன்று எமக்கு இராணுவத்தினரால் கையளிக்கப்பட்டது.

 ஆனாலும் தற்பொழுது அவர்களில் அத்து மீறல் இருப்பதால் மர தளபாட கடை ஒன்றிற்கு  அத்து மீறலை தடுக்க  மாதம் இருபதாயிம் ரூபா  குத்தகைக்கு ஒருமாதத்திற்கு மட்டும் வழங்கியுள்ளோம் எனத் தெரிவித்தார் 

போராளிகள் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் , மக்கள் நல அமைப்புக்கள் என பலர் நிலத்திற்கான கோரிக்கைகளை வழங்கியுள்ள நிலையில் ஏன் பெரும்பான்மை இனத்தவருக்கு வழங்கியுள்ளீர்கள் எனக் கேட்டபோது அவாறு எந்த கோரிக்கையும் எமக்கு தரவில்லை இராணுவ ஆக்கிரமிப்பை தடுப்பதற்காகவும் சும்மா இருக்கும் நிலத்தில் வருமானத்தை பெறுவதற்காகவும் வழங்கியுள்ளோம் எனத் தெரிவித்தார்