புறப்­ப­டு­வ­தற்கு தயா­ராகி  நகர்ந்துகொண்­டி­ருந்த விமானமொன்றின் இறக்கை மீது நப­ரொ­ருவர் பெரும் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­திய சம்­பவம்  நைஜீ­ரிய லாகோஸ் நகர விமான நிலையத்தில் இடம்­பெற்­றுள்­ளது.

கடந்த வெள்ளிக்­கி­ழமை இடம்பெற்ற இந்த சம்­பவம் தொடர்பில் நேற்று முன்­தினம் சனிக்­கி­ழமை தக­வல்கள் வெளி யா­கி­யுள்­ளன. அந்­நபர் விமா­னத்தில் ஏறும் காட்சி  அந்த விமா­னத்தில் பய­ணித்த பய­ணி­யொ­ரு­வரால் எடுக்கப்பட்டுள்ளது.

அந்நபர் விமானத்தில் ஏறு­வதைக் கண்ட பய­ணிகள் அச்­சத்­துடன்  கூச்­ச­லிட்­டுள்ளனர். இந்­நி­லையில் விமானி  விமா னத்தை மெதுவாக நிறுத்­தி­யுள்ளார். 

இத­னை­ய­டுத்து சம்­பவ இடத்­திற்கு வந்த பொலிஸார் அந்­ந­பரை கைது­செய்து அழைத்துச் சென்­றனர். அவர் எதற்­காக  விமா­னத்தின் இறக்கை மீது ஏற முயற்சித்தார் என்பது குறித்து தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.