(செ.தேன்மொழி)

கொழும்பு - கண்டி பிரதான வீதியில் நிட்டம்புவ- கலகெடிஹேன பகுதியில் கடந்த 16 ஆம் திகதி வேன் ஒன்றின் சாரதியை தாக்கியமை தொடர்பில் கொழும்பு குற்றப்பிரிவினரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நால்வரும் இன்று அடையாள அணிவகுப்பில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளனர்.

பிரபுக்கள்  வாகனத்திலும் , பிரபுக்கள் பாதுகாப்பு பிரிவின் வாகனத்திலும் வந்த நால்வரே கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பு குற்றப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

கொழும்பு குற்றப் பிரிவினர் கடந்த சனிக்கிழமை சந்தேக நபர்களை அத்தனகல்ல நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய போது நீதிவான் இவர்களை இன்று திங்கட்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டிருந்தமை  குறிப்பிடத்தக்கது.