முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கினை நீதிவான் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 3 ஆம் திகதி வரை ஒத்திவைத்தார்.

குறித்த வழக்கானது இன்றைய தினம் கொழும்பு நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் நீதிமன்றில் ஆஜராகியிருந்தனர். 

இதன்போதே  நீதிவான் மேற்படி வழக்கினை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 3 ஆம் திகதி வரை ஒத்தி வைத்தார்.

கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்களை  தடுப்பதற்கு அல்லது அதன் தாக்கங்களை குறைத்துக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்காமை தொடர்பில் குற்றவியல் பொறுப்புச் சாட்டப்பட்டு, இவர்கள் சி.ஐ.டி.யினரால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.