இலங்கை அணியில் முன்னாள் நட்­சத்­திர வீரர்­க­ளான குமார் சங்­கக்­கார மற்றும் மஹேல ஜய­வர்­தன ஆகியோர் இல்­லா­தது இங்­கி­லாந்து அணியின் வெற்­றிக்கு மேலும் வலிமை சேர்த்­துள்­ள­தாக பிரித்­தா­னிய வானொ­லி­யொன்று செய்தி வெளி­யிட்­டுள்­ளது.

அதே­வேளை இளம் வீரர்­களை கொண்டு கள­மி­றங்கும் இலங்கை அணியை குறைத்து மதிப்பிட்­டு­விடக் கூடாது என்றும் அந்த வானொலி தெரி­வித்­துள்­ளது.

இலங்கைக் கிரிக்கெட் அணி இங்­கி­லாந்­திற்கு சுற்­ றுப்­ப­யணம் மேற்­கொண்­டுள்­ளது. அந்­நாட்டு அணி­யு டன் 3 டெஸ்ட் போட்­டிகள், 5 ஒருநாள் போட்­டிகள் மற்றும் ஒரு இரு­ப­துக்கு 20 போட்டி கொண்ட தொடரில் விளை­யா­டு­கின்­றது.

கடந்த 4ஆம் திகதி இலங்கை அணி இங்­கி­லாந்­திற்கு புறப்­பட்­டது.

இந்­நி­லை­யி­லேயே குறித்த பிரித்­தா­னிய வானொலி மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­துள்­ளது.

சங்­கக்­கார மற்றும் மஹேல அணியில் இல்­லா­தது இலங்கை அணிக்கு பல­வீனம் என்­ற­போ­திலும் எதி­ரணி அதை பல­மாக கரு­து­கின்­றது. இந்­நி­லை­யி­லேயே அந்த வானொலி இந்தக் கருத்தைத் தெரி­வித்­துள்­ளது.

எவ்­வா­றா­யினும் இலங்கை அணியை பிர­தி­நி­தித்­துவப் படுத்தும் இளம் வீரர்கள் தொடர்பில் தமது அணிக்கு அனுபவம் இன்மையானது இலங்கை அணிக்கு சாதகமாக அமையக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.