சவுதி ரியாலுடன் 23  வயதுடைய இலங்கைப் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  அவரிடமிருந்து 1,90 000 சவுதி ரியால்கள் மீட்கப்பட்டுள்ளன.

சென்னையில் இருந்து பண்டாரநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த போதே விமான நிலைய சுங்க அதிகாரிகளால் குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

மிகவும் சூட்சுமமான முறையில் பயணப்பைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த சவுதி ரியால்கள் சோதனைகளின் போது கைப்பற்றப்பட்டுள்ளன.

இதன் இலங்கை பெறுமதி  8,930 000  ரூபா என்று சுங்க ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.