நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் வெப்பநிலை அதிகரித்து காணப்படுவதால் முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரையிலான காலப்பகுதியில் பாடசாலை மாணவர்களை வகுப்பறையை விட்டு வெளியில் செல்வதற்கு அனுமதிக்க வேண்டாமென சுகாதார போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சு பாடசாலை அதிபர்களை வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பில் அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
கடந்த சில மாதங்களாக பல மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரித்து காணப்படுகிறது. அதிகரித்த வெப்பமானது பாடசாலை மாணவர்களை அதிகமாக பாதிக்கச் செய்கின்றது.
எனவே மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும். அந்த வகையில் வெயில் அதிகரித்த காலப்பகுதியில் மாணவர்களின் வெளிப்பாட விதானங்களை தவிர்த்துக்கொள்ளுமாறு அமைச்சு ஆலோசனை வழங்குகிறது.
மேலும் வகுப்பறைகளில் கதவுகள், ஜன்னல்கள் திறக்கப்பட்ட நிலையில் காற்றோட்டமான சூழலில் மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்ல நடவடிக்கை எடுப்பதோடு முடிந்த வரை மாணவர்களுக்கு தேவையான சுத்தமான குடிநீர் வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்குமாறும் அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM