வவுனியாவில் தங்க வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டு அகதிகளில் 18 பேர் மீள நீர்கொழும்புக்கு நேற்று அழைத்து செல்லப்பட்டனர்.

Image result for meegamuwa

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நாட்டில் இடம்பெற்ற தற்கொலை தாக்குதலையடுத்து நீர்கொழும்பில் தங்க வைக்கப்பட்டிருந்த ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அகதிகளில் ஓரு தொகுதியினர் இரண்டு கட்டங்களாக அழைத்து செல்லப்பட்டு வவுனியா பூந்தோட்டம் பகுதியில் உள்ள வடமாகாண கூட்டுறவுப் பயிற்சிக் கல்லூரியில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

பிரதேச அரசியல்வாதிகள், பொது அமைப்புக்கள் எனப் பலரும் எதிர்ப்பு மத்தியில் அவர்கள் இராணுவ பொலிஸ் பாதுகாப்புடன் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

இவர்களில் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 12 ஆண்களும் 4 பெண்களும் என 16 வெளிநாட்டு அகதிகளை மீள நீர்கொழும்புக்கு அழைத்து சென்றுள்ளனர்.