(செ.தேன்மொழி)

வாகன நெரிசல் மற்றும் வாகன விபத்துக்களை கட்டுப்படுத்துவதற்காக நாடளாவிய ரீதியில் பொலிஸாரால் செயற்படுத்திவரும் மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்யும் நடவடிக்கைகளுக்கமைய 16 ஆம் நாளான இன்றுவரை 4 ஆயிரத்து 387 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த 5 ஆம் திகதி பொலிஸ் தலைமையகத்தினால் கொண்டுவரப்பட்ட இச் செயற்திட்டத்திற்கமையவே இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அதேவேளை இவ்வாறு கைது செய்யப்படும் சாரதிகள் குற்றம் செய்துள்ளதாக நீதிவான் முன்னிலையில் நிரூபிக்கப்பட்டால், அவர்களது சாரதி அனுமதிப்பத்திரம் சில நாட்களுக்கு தடைச் செய்யப்படும் என்றும் அவர்களிடம் 25 ஆயிரம் ரூபா வரை தண்டப்பணம் அறவிடப்படும் என்றும் பொலிஸ் தலைமையகம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.