(செ.தேன்மொழி)

ரத்கம பகுதியில் இளைஞர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ரத்கம - கெகில்ல பகுதியில் நேற்று இரவு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த நபரொருவர் கராப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ரத்கம - கப்புமுல்ல பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய சமீர சந்திமால் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக கராப்பிட்டி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. 

ரத்கம பொலிஸார் சந்தேக நபர்களை அடையாளம் காண்பதற்காக தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.