(எம்.ஆர்.எம்.வஸீம்) 

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை அடிப்படையாகக்கொண்டு சில வங்குரோத்து அரசியல்வாதிகள்  அரசியல் லாபம்தேட முயற்சித்தனர். இதற்கு நாங்கள் இடமளிக்க மாட்டோம். அத்துடன் வன்முறைகளில் ஈடுபட்டவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்படவேண்டும். அவர்களை மன்னிக்க முடியாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

குருணாகல் பண்டுகஸ்வத்த முஸ்லிம் மகாவித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்டிருந்த விஞ்ஞான ஆய்வுகூட கட்டத்திறப்பு விழா நேற்று இடம்பெற்றது. 

இதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு கட்டத்தை திறந்துவைத்து அங்கு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

முஸ்லிம்களுக்கு எதிராக இங்கு பிரச்சினையை ஏற்படுத்தினால் மத்திய கிழக்கில் தொழில் புரியும் எமது மக்களை அவர்கள் நாட்டுக்கு திருப்பி அனுப்புவார்கள். அந்த மக்கள் பல நோக்கங்களுக்காக தொழிலுக்கு சென்று, வெறும் கையுடன் திரும்பினால் என்ன நடக்கும். பாரியளவில் பொருளாதார பிரச்சினை ஏற்படும். இதனை ஏற்படுத்துவதே வன்முறையாளர்களின் நோக்கமாகும் எனவும் பிரதமர் இதன்போது சுட்டிக்காட்டினார்.