(எம்.மனோசித்ரா)

வாக்குரிமையாளர்களை பதிவு செய்யும் சட்டத்தில் திருத்தத்தினை மேற்கொள்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 

வருடாந்தம் மேற்கொள்ளப்படும் வாக்காளர்களின் பெயர்ப்பட்டியல் மறுசீரமைக்கும் பணியில் அதில் ஆவணம் உறுதி செய்யப்பட்டும். 

அதன் பின்னர் மற்றும் அடுத்த ஆண்டு வாக்காளர் உரிமை ஆவணத்தில் திருத்தங்களை ஆரம்பிக்கும் வரையிலான காலப்பகுதியில் 18 வயதை பூர்த்தி செய்யும் மற்றும் ஏனைய தேவையான தகுதிகளை பூர்த்தி செய்யும் இளைஞர்களுக்கு வாக்குகளைப் பயன்படுத்துவதற்கு சந்தர்ப்பத்தை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.