(எம்.மனோசித்ரா)

தேயிலை ஏற்றுமதி மீது விதிக்கப்படும் தேயிலை மேம்பாடு மற்றும் விற்பனை வரியில் திருத்தத்தை மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 

1975 ஆம் ஆண்டு இல 14 கீழான இலங்கை தேயிலை சபை சட்டத்தில் ஒழுங்கு விதிகளுக்கமைய ஏற்றுமதி செய்யப்படும் அனைத்து 1 கிலோ தேயிலைக்காக 3.50 வரி பதிவூசெய்யப்பட்ட தேயிலை ஏற்றுமதியாளர்களிடம் அறவிடப்படுகின்றது. 

தற்போது தேயிலை ஏற்றுமதியின் அடிப்படையில் விதிக்கப்பட்டுள்ள ஏனைய நேரடி மற்றும் மறைமுக வரியைப் போன்று பொருளாதார சேவைக் கட்டணத்தினால் தேயிலை தயாரிப்பு செலவுகள் மேலும் அதிகரிக்கும் என்பதால் தேயிலை மேம்பாட்டு மற்றும் விற்பனை வரியை 1 கிலோவிற்கு ரூபா 3.00 ஆக திருத்துவதற்கான கட்டளை திருத்த சட்ட மூலத்தயாரிப்பின் மூலம் முன்னெடுக்கப்பட்டுள்ள வர்த்தமானி அறிவிப்பை வெளியிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.