மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் விளையாடவுள்ள இந்திய கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அணியில் இந்திய அணியின் முன்னாள் தலைவரும் விக்கெட் காப்பாளருமான தோனி இணைத்துக் கொள்ளப்படவில்லை. அதே நேரம் உலகக் கிண்ணத் தொடரில் காயமடைந்த தவான் அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

மேற்கிந்தியத்தீவுகள், அமெரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் இந்திய அணியானது மேற்கிந்தியத்தீவுகள் அணியுடன் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் மூன்று இருபதுக்கு - 20, மூன்று ஒருநாள், 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது.  

இந் நிலையில் இத் தொடருக்கான விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியை பி.சி.சி.ஐ. சற்று முன்னர் அறிவித்துள்ளது.

இருபதுக்கு - 20

விராட் கோலி, ரோஹித் சர்மா, ஷிகர் தவான், கே.எல்.ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், மணிஷ் பாண்டே, ரிஷாப் பந்த், குர்ணல் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், புவனேஷ்வர் குமார், கலீல் அஹமட், தீபக் சாஹர், நவ்தீப் சைனி.

ஒருநாள் போட்டி

விராட் கோலி, ரோஹித் சர்மா, ஷிகர் தவான், கே.எல்.ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், மணீஷ் பாண்டே, ரிஷாப் பந்த், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், யஸ்வேந்திர சாஹல், கேதர் ஜாதவ், முகமது ஷமி, புவனேஷ்வர் குமார், கலீல் அகமது, நவ்தீப் சைனி.

டெஸ்ட் போட்டி

விராட் கோலி கேப்டன், ரகானே, மயங்க் அகர்வால், கே.எல்.ராகுல், புஜாரா, ஹனுமா விஹாரி, ரோஹித் சர்மா, ரிஷாப் பந்த், விருத்திமான் சஹா, அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், இஷாந்த் சர்மா, முகமது ஷமி, ஜஸ்பிரீத் பும்ரா, உமேஷ் யாதவ்.