திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கூனித்தீவு பகுதியில் உள்ள கடற்கரையை  காட்டுப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 61 டெட்டனேட்டர் குச்சிகள் மீட்கப்பட்டுள்ளதாக சம்பூர் பொலிஸார் தெரிவித்தனர். 

நேற்று (20) இரவு 11.00 மணியளவில் குறித்த பகுதியில் சோதனை மேற்கொண்டிருந்த போதே இவ் வெடி பொருட்கள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடரிபில் இதுவரையில் சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை என்பதோடு குறித்த வெடி பொருட்கள் எதற்காக மறைத்து வைக்கப்பட்டிருந்தது என்பது குறித்து சம்பூர் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.