பாகிஸ்தானின் தேரா இஸ்மாயில் கான் பகுதியிலுள்ள வைத்தியசாலையொன்றின் பிரதான நுழைவாயிலில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். 

அத்துடன் இந்த தாக்குதல் காரணமாக 30 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகளவும் அவர்களில் மூவரது நிலைமை கவலைக்கிடமாகவுள்ளதனால் உயிரிழப்புகள் அதிகரிக்கக்கூடும் என அச்சம் தெரிவித்துள்ளனர்.

குண்டுவெடிப்பைத் தொடர்ந்து, மீட்புக் குழுக்கள் தொடர்ந்தும் மீட்பு பணியில் ஈடுபட்டு வருவதுடன், இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் உரிமை கோரவில்லை எனவும் அந் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.