(செ.தேன்மொழி)

நுவரெலியா பகுதியில் கொள்ளைச் சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நுவரெலியா பகுதியில் கடந்த 16 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வீட்டொன்றை உடைத்து, சொத்துக்களை கொள்ளையிட்டுள்ளதாக பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.

இதன்போது சந்தேக நபர்களால் குறித்த வீட்டிலிருந்து 3 இலட்சத்து 60 ஆயிரம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகளும் 55 இலட்சம் ரூபாய் பெறுமதியான கார் ஒன்றும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனைதொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வந்த பொலிஸார் சந்தேக நபர்களை நேற்று கைது செய்ததாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

வலல்லாவிட பகுதியைச் சேர்ந்த 21, 24 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். 

இவர்களிடமிருந்து கொள்ளையிடப்பட்ட பொருட்களும், கொள்ளையிட பயன்படுத்திய மோட்டார் சைக்கிளும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.