உலக கிண்ணத் தொடரில் வெற்றிபெற்ற விதம் நியாமற்றது என இங்கிலாந்து கிரிக்கெட் அணித் தலைவர் இயன் மோர்கன் தெரிவித்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஐ.சி.சி.12 ஆவது ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரின் இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான இறுதி ஆட்டம் சமனில் முடிந்தது. இதையடுத்து கடைபிடிக்கப்பட்ட சூப்பர் ஓவரும் சமனில் நின்றது. எனினும் அதிக பவுண்டரி அடித்த அணி என்ற வகையில் இங்கிலாந்து உலக சாம்பியனாக அறிவிக்கப்பட்டது. 

இது குறித்து இங்கிலாந்து அணித் தலைவர் இயான் மோர்கன் குறிப்பிடுகையில்,

இரு அணிகளும் பெரிய வித்தியாசமின்றி மிக நெருக்கமாக ஆடிய நிலையில், இந்த மாதிரி முடிவு கிடைத்து. கிண்ணத்தை வென்றதை நியாயமானது என்று சொல்ல முடியாது. களத்தில் நடந்தது என்ன என்பதை அறிவேன். ஆனாலும் போட்டியின் முடிவில் என்னால் எதுவும் செய்ய முடியாது என்றார்.