வாழ்க்கையில் வெற்றிபெற என்ன செய்ய வேண்டும்? அனுபவத்தை பகிர்ந்தார் சர்மா மகாலிங்கம்

Published By: Digital Desk 4

21 Jul, 2019 | 12:33 PM
image

தற்போதைய தலைமுறையினர், ஒரு விடயத்தை ஆர்வமுடன் தொடங்குகின்றனர். ஆனால் அதில் முழுமை பெறுவதில்லை. ஏதோ ஒரு காரணத்திற்காக இடைநிறுத்தி விடுகின்றார்கள். ஒரு விடயத்தை செய்ய வேண்டுமாக இருந்தால் முதலில் முறையாக தீர்மானிக்க வேண்டும். இதன் பின்னர் எந்தவொரு காரணத்திற்காகவும் குறித்த தீர்மானத்திலிருந்து பின் நகரக்கூடாது. ஒரு விடயத்தில் வெற்றிக்கொள்ள கடினமான முழுமையான முயற்சி தேவை. இதன் மூலமே வாழக்கையில் வெற்றி பெறலாம் என சர்வதேச டோஸ்ட்மாஸ்டர் கழகத்தின் இலங்கையின் 82 ஆவது மாவட்ட ஆளுநர் சர்மா மஹாலிங்கம் தெரிவித்தார்.

டோஸ்ட்மாஸ்டர் கழகத்தில் நான் இணைந்ததை தொடர்ந்து தொழிற்துறை மற்றும் தலைமைத்துவத்தில் சிறந்த முன்னேற்றத்தை கண்டுள்ளேன். நபர் ஒருவர் தனது தொழிற்துறையில் மேன்மையான இடத்துக்கு செல்ல வேண்டுமாக இருந்தால் ஒரு பொதுமுறையான தொடர்பாடலும் தலைமைத்துவம் அவசியமானதாகும் எனவும் குறிப்பிட்டார்.

வீரகேசரிக்கு வழங்கி விசேட செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அந்த செவ்வியின் முழு விபரம் வருமாறு,

கேள்வி: உலகலாவிய ரீதியில் மாத்திமல்ல தற்போது இலங்கையிலும் டோஸ்ட்மாஸ்டர் கழகம் என்பது மிகவும் பிரபலமடைந்துள்ளது. உண்மையில் இந்த 'டோஸ்ட்மாஸ்டர்" என்பதன் விளக்கம் என்ன? 

பதில்: நான் சந்திக்கும் பெரும்பாலானவர்கள் இதையே கேட்கின்றனர். டோஸ்ட்மாஸ்டர் என்ற பெயருக்கும் அதன் செயற்பாடுகளுக்கு தொடர்பு இருப்பதாக தெரியவில்லை. 96 வருடங்களுக்கு முன்னர் அமெரிக்கா கலிபோர்னியா பகுதியில் ரால்ப் சி. ஸ்மெட்லி என்பவர் டோஸ்ட்மாஸ்டர் கழகத்தை ஆரம்பித்துவைத்தார். இவருடைய காலப்பகுதியில் வை.எம்.சி.ஏ. என இளைஞர்களுக்கான கழகம் ஒன்று இருந்தது. இந்த கழகத்தில் இருந்த இளைஞர்களின் ஆங்கில மொழி அறிவு, குறைவாக இருப்பதை ஸ்மெட்லி அறிந்துள்ளார். இவர்களின் தொடர்பால் திறனை அதிகரிப்பதற்காக உருவாக்கப்பட்டதே டோஸ்ட்மாஸ்டர் கழகமாகும்.

தற்போது உலகளாவிய ரீதியில் 17 ஆயிரம் டோஸ்ட்மாஸ்டர் கழகங்களும் அதில் 4 இலட்சம் உறுப்பினர்களும் காணப்படுகின்றனர். தற்போது 143 நாடுகளில் டோஸ்ட்மாஸ்டர் கழகங்கள் வியாபித்துள்ளன. இலங்கையில் 35 வருடங்களுக்கு முன்னர் 'கொழும்பு டோஸ்ட்மாஸ்டர்" என்ற பெயரில் கழகம் ஆரம்பிக்கப்பட்டது. தற்போது எமது நாட்டில் 150 கழகங்கள் காணப்படுவதோடு 4000 அங்கத்தவர்கள் இருக்கின்றனர்.

கேள்வி: டோஸ்ட்மாஸ்டர் கழகமானது ஒரு மனிதனுடைய தொடர்பாடல் துறையை எவ்வாறு விருத்தி செய்கின்றது.?

பதில்: குடும்பம், தொழில், சமூகம் என சகல இடங்களிலும் தொடர்பாடல் என்பது முக்கிய பங்கை வகிக்கின்றது. சரியான தொடர்பாடல் இன்மையின் காரணமாக பல பிரச்சினைகள் தோன்றுவதற்கு காரணமாக இருக்கின்றன. ஒரு நல்ல தலைமைத்துவத்தை உருவாக்குவதில் கூட தொடர்பாடல் முக்கிய பங்கை வகிக்கின்றது.

இதனடிப்படையிலேயே டோஸ்ட்மாஸ்டர் கழகம் ஊடாக நபர் ஒருவரின் தொடர்பாடல் அறிவையும், அதன் ஊடான தலைமைத்துவ பண்பையும் பயிற்றுவித்து வருகின்றோம்.

கேள்வி: Public Speaking என்பது டோஸ்ட்மாஸ்டரில் முக்கிய ஒரு பகுதியாக காணப்படுகின்றது. ஒரு சிலராலே இதனை திறமையாக செய்ய முடியும். டோஸ்ட்மாஸ்டர் கழகத்தில் சாதாரண மனிதனாக இணைந்த இலங்கையை சேர்ந்த பலர் இன்று உலகளவில் பிரபலமடைந்துள்ளார்கள். public speaking skills இல் முக்கிய கூறுகள் என எதனை கூறலாம்?

பதில்:public speaking skills என்பது முக்கியமான ஒன்றாக காணப்படுகின்றது. இதில் நேரம் என்பதே முக்கிய விடயமாக காணப்படுகின்றது. அதாவது குறிப்பிட்ட நேரத்துக்குள் நாம் எவ்வாறான ஆக்கபூர்வமான தொடர்பாடலை மேற்கொள்கின்றோமோ அதன் அடிப்படையிலேயே அதன் முக்கியத்துவம் பெறுகின்றது.

குறிப்பாக ஒரு பொது இடத்தில் நாம் பேசும் போது, குறிப்பிட்ட நேரத்துக்குள் சரியான கட்டமைப்பில் (தொடக்கம், விடயக்குறிப்பு, முடிவுரை) பேசி முடிக்க வேண்டும். இதுவே public speaking இல் முக்கிய அம்சங்களாக காணப்படுகின்றன.

கேள்வி: டோஸ்ட்மாஸ்டர் கழகத்தில் உங்களுடைய அனுபவம் தொடர்பில் கூறமுடியுமா?

பதில்: 13 வருடங்களுக்கு முன்னர் கொழும்பு டோஸ்ட்மாஸ்டர் கழகத்துக்கு சென்று அங்கு இடம்பெற்ற செயற்பாடுகளை அவதானித்தேன். ஒரு தொழில்முயற்சியாளராக டோஸ்ட்மாஸ்டர் கழகத்தின் செயற்பாடுகளில் எனக்கு ஈடுபாடு ஏற்பட்டது. அதாவது தொடர்பாடல் மற்றும் தலைமைத்துவத்தை வளர்க்கும் நோக்கில் டோஸ்ட்மாஸ்டர் கழகத்தின் செயற்பாடுகள் பொதுநோக்கு அடிப்படையில் காணப்பட்டன. கழகத்தில் இணைந்த பின்னர் எனது வியாபாரத்திலும் ஏனைய துறைகளிலும் தனித்துவத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இந்த 13 வருடங்களில் டோஸ்ட்மாஸ்டர் கழகம் பெரிய அனுபவத்தை கற்று தந்துள்ளது.

கேள்வி: ஆங்கில அறிவு இல்லாத ஒருவர் டோஸ்ட்மாஸ்டர் கழகத்தில் இணைவதன் ஊடாக அவருடைய தொடர்பாடல் திறனை வளர்த்த கொள்ள முடியுமா?

பதில்: தொடர்பாடல் என்பது மொழியுடன் தொடர்புபட்டதல்ல. நபர் ஒருவர் எந்தவொரு மொழியிலும் தொடர்பாடல் திறனை வளர்த்துக்கொள்ளலாம். குறிப்பாக டோஸ்ட்மாஸ்டர் கழகமானது, உலகலாவிய ரீதியில் வியாபித்து காணப்படுவதால் பொது மொழியாக ஆங்கிலத்தை அடிப்படையாக கொண்டே காணப்படுகின்றது.

நபர் ஒருவர் கழகத்தில் இணையும் போது நாம் ஒருபோதும் ஆங்கில அறிவை பொருட்படுத்துவதில்லை. ஆங்கிலம் தெரிந்தவர்கள் மாத்திரம் தான் இந்த கழகத்தில் அங்கத்துவம் வகிக் முடியும் என நிபந்தனையும் இல்லை. அதாவது நபர் ஒருபர் தனதுதொடர்பாடல் திறன் மற்றும் தலைமைத்துவ பண்பை வளர்த்துக்கொள்ளும் நோக்காகவே டோஸ்ட்மாஸ்டர் கழகம் காணப்படுகின்றது.

ஆங்கில அறிவு இல்லாத ஒருவர் கழகத்தில் இணைவதன் ஊடாக காலப்போக்கில் அவர் ஆங்கிலம் தொடர்பான அறிவை பெற்றுக்கொள்ள முடியும். ஆனால் தொடர்பாடல் மொழியை அடிப்படையாக கொண்டது அல்ல.

கேள்வி: டோஸ்ட்மாஸ்டர் கழகத்தில் ஒருவர் இணைய வேண்டுமாக இருந்தால் எவ்வாறான படிமுறைகளை பின்பற்ற வேண்டும்?

பதில்: எமது கழகங்களில் பொது மொழியாக ஆங்கிலத்தையே பயன்படுத்தி வருகின்றோம். இதன் மூலம் புதிதாக இணைபவர் ஆங்கில திறனை வளர்த்துகொள்ளலாம். கழகத்தில் இணைந்த பின்னர் சர்வதேச டோஸ்ட்மாஸ்டர் கழகத்தினால் பாடநெறி ஒன்று தரப்படும். இதனை அடிப்படையாகவும் கழக உறுப்பினர்களின் உதவியுடனும் தொடர்பாடல் திறனையும் தலைமைத்துவ பண்பையும் வளர்த்துக்கொள்ளலாம்.

கேள்வி : டோஸ்ட்மாஸ்டர் கழகம் உங்களுடைய தொழிழ்துறையில் எவ்வாறான செல்வாக்கை செலுத்தியுள்ளது?

பதில் : ஒருவருடைய தொழிற்துறையில், தொடர்பாடல் மற்றும் தலைமைத்துவம் என்பன மிக முக்கிய செல்வாக்கை செலுத்துகின்றன. இந்த நவீன காலக்கட்டத்தில் தலைமைத்துவத்தில் இருக்கும் நபரோ அல்லது வியாபாரத்துறையில் பிரகாசிக்கும் நபரோ,பொதுமக்களுடன் மேற்கொள்ளும் தொடர்பாடல் முறைமை சிறப்பானதாக இருக்க வேண்டும். ஆரம்ப காலங்களில் அதிகாரத்தை பயன்படுத்தி தலைமைத்துவ செயற்பாடுகளை முன்னெடுக்கும் நிலை காணப்பட்டது. ஆனால் தற்போதை மிலேனிய தலைமுறையினர் இடையே அவ்வாறு செயற்பட முடியாது.

அனைவரும் கல்வி அறிவு படைத்தவர்களாகவும் ஏதோ ஒருவகையில் திறமையுடையவர்களாகவும் காணப்படுகின்றார்கள். எனவே நாம் அதிகாரத் தொனியில் தொடர்பாடல்களை பயன்படுத்த முடியாது. மாறாக அன்பாகவும் அறிவு பூர்வமான தொடர்பாடல்களையே மக்களுடன் பேண வேண்டும். இதனை பொதுநோக்காக கொண்டே டோஸ்ட்மாஸ்டர் கழகம் செயற்பட்டு கொண்டிருக்கின்றது. இந்த டோஸ்ட்மாஸ்டர் கழகத்தில் நான் இணைந்ததை தொடர்ந்து தொழிற்துறை மற்றும் தலைமைத்துவத்தில் சிறந்த முன்னேற்றத்தை கண்டுள்ளேன். நபர் ஒருவர் தனது தொழிற்துறையில் மேண்மையான இடத்துக்கு செல்ல வேண்டுமாக இருந்தால் ஒரு பொதுமுறையான தொடர்பாடலும் தலைமைத்துவம் அவசியமாகும்.

கேள்வி: டோஸ்ட்மாஸ்டர் கழகத்தின் உங்கள் தலைமையிலான 82 ஆவது கழகமானது,

இலங்கை மற்றும் இந்தியா அளவில் முதலாவது கழகமாக தெரிவு செய்யப்பட்டுள்ளது. இது ஒரு பாரிய வெற்றியாகும். இந்த வெற்றிக்கு காரணம் நீங்கள் கருதுவது என்ன?

பதில் : குறிப்பாக கடந்த இரு வடங்களுக்கு முன்னர் டோஸ்ட்மாஸ்டர் கழகத்தின் உலகத் தலைவராக இருந்த அருணாசலம் பால்ராஜ் உள்ளிட்ட பல தலைவர்களின் வழிநடத்தல்களும் எமது கழகத்தில் உள்ளவர்களின் உணவர்வு பூர்வமான செயற்பாடுகள் காரணமாகவே இந்த வெற்றியை எட்டக்கூடியதாக இருந்தது.

கேள்வி: டோஸ்ட்மாஸ்டர் கழகங்கள் குறிப்பாக நகரங்களை மையப்படுத்தியதாகவே காணப்படுகின்றன. ஆனால் கிராமபுற மக்களுக்கு இந்த வாய்ப்பு கிடைப்பதில்லை. எனவே எதிர்காலத்தில் பின்தங்கிய பகுதியில் உள்ள ஆர்வமுள்ள நபர்களை டோஸ்ட்மாஸ்டர் கழகத்தில் இணைத்து செயற்படும் திட்டங்கள் எதுவும் இருக்கின்றனவா?

பதில்: கொழும்பை அண்டிய பகுதிகளிலேயே டோஸ்ட்மாஸ்டர் கழகங்கள் அதிகமாக காணப்படுகின்றன. ஆனால் கடந்த வருடத்தில் வடமராட்சி, மட்டக்களப்பு, பதுளை மற்றும் மாத்தறை போன்ற இடங்களில் இந்த டோஸ்ட்மாஸ்டர் கழகத்தை ஏற்படுத்தியுள்ளோம்.

டோஸ்ட்மாஸ்டர் கழகத்தில் இணைவதற்கு ஆங்கில அறிவு கட்டாயம் இருக்க வேண்டும் என சிலர் நினைக்கின்றார்கள். ஆனால் அவ்வாறு இல்லை. ஆங்கில அறிவை மேம்படுத்தவே இந்த கழகம் இருக்கின்றது. குறிப்பாக வடமராட்சி, மட்டக்களப்பு, பதுளை மற்றும் மாத்தறை போன்ற பகுதிகளில் உள்ள டோஸ்ட்மாஸ்டர் கழகங்களில் ஆங்கில அறிவு குறைவாக உள்ளது என நினைத்து கழகத்தில் இணைய தயங்கியவர்கள் இன்று சரளமாக ஆங்கிலம் கதைக்கின்றார்கள்.

குறிப்பாக கழகத்தின் உறுப்புரிமையை பெற்றுக்கொள்ள சிறுதொகை பணம் செலுத்த வேண்டியிருக்கும். கிராமபுற பகுதிகளில் உள்ள மக்களுக்கு இதுவொரு சவாலாக காணப்படும். ஆனால் இதற்காக பல செயற்திட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றோம்.

மேலும் எமது ஐந்து வருட திட்டத்தில் இலங்கையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் டோஸ்ட்மாஸ்டர் கழகங்களை ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்துளோம். 

கேள்வி: வளர்ந்து வரும் இளம் தளமுறையினர் தமது மொழியாற்றலையும், தொடர்பாடலையும் விருத்தி செய்வதற்கு அடிப்படையாக செய்ய வேண்டிய செயற்பாடுகள் என்ன?

பதில்: தற்போதைய தலைமுறையினர், ஒரு விடயத்தை ஆர்வமுடன் தொடங்குகின்றனர். ஆனால் அதில் முழுமை பெறுவதில்லை. ஏதோ ஒரு காரணத்திற்காக இடைநிறுத்தி விடுகின்றார்கள். ஒரு விடயத்தை செய்ய வேண்டுமாக இருந்தால் முதலில் முறையாக தீர்மானிக்க வேண்டும். இதன் பின்னர் எந்நதவொரு காரணத்திற்காகவும் குறித்த தீர்மானத்திலிருந்து பின் நகரக்கூடாது. ஒரு விடயத்தில் வெற்றிக்கொள்ள கடினமான முயற்சி தேவை. இதன் மூலமே வாழக்கையில் வெற்றி பெறலாம்.

தொடர்பாடல் தலைமைத்துவம் (communication leadership skills) இல்லாது உலகத்தில் எவ்வித செயற்பாடுகளை இலகுவாக முன்னெடுக்க முடியாது. குடும்பம், சமூகம், நண்பர், அலுவலகம் என அனைத்து இடங்களிலும் தொடர்பாடல் முக்கிய பங்கை வகிக்கின்றது. தொடர்பாடலில் ஏற்படும் தவறுகள் காரணமாகவே தனிப்பட்ட நபர்களுக்கு இடையோ அல்லது சமூகத்தில் பாரிய பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

ஒருவரிடம் சிறப்பான தொடர்பாடல் திறன் இருக்குமாக இருந்தால் தானாகவே அவருக்கு தலைமைத்துவ பண்பும் வந்து இணைந்து விடும். எனவே இளைஞர்கள் எதை செய்ய வேண்டுமாக இருந்தாலும் முழு மனதுடன் செய்ய வேண்டும். இதுவே வாழ்க்கையின் வெற்றிக்கு கைகொடுக்கும் என்றார்.

- செ. லோகேஸ்வரன்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சமூக மாற்றத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும் திருநர்கள்!

2023-11-29 21:00:21
news-image

மூடு விழா காணும் வைத்தியசாலைகள்! :...

2023-11-29 17:29:24
news-image

கடன்களை பெறுவதற்கு பொருத்தமான காலமா?

2023-11-29 14:15:02
news-image

நிகழ்நிலை பாதுகாப்பா அல்லது சுதந்திரமான நிகழ்நிலைப்...

2023-11-29 16:26:25
news-image

2.3 மில்லியன் குழந்தைகள் உட்பட 5.7...

2023-11-29 12:44:11
news-image

பாதுகாப்பு கரிசனைகளை புறக்கணிக்கும் இலங்கையின் மாணிக்கக்...

2023-11-29 14:51:32
news-image

பெருந்தோட்ட மக்களின் 'முகவரி பிரச்சினைக்கு' நிரந்தர...

2023-11-28 11:59:25
news-image

 ஓய்வு பெற்ற பிறகும் ஓய்வூதியம் பெறாதிருக்கும்...

2023-11-28 11:20:13
news-image

தொழிற்சங்க செயற்பாடுகள் இனியும் சாத்தியப்படுமா? 

2023-11-28 11:41:09
news-image

பொருளாதாரத்தை மீளக்கட்டியெழுப்ப மக்களுடனான நம்பிக்கையை மீளக்கட்டியழுப்பவேண்டும்

2023-11-28 11:36:20
news-image

அரச வருமான இலக்கை அடைவதன் சவால்கள்

2023-11-27 17:53:39
news-image

2036 ஒலிம்பிக்ஸ் விளையாட்டுக்களை நடத்தும் வல்லமை...

2023-11-27 17:49:39