இன்று இரவு  8 புகையிரதசேவைகளை இரத்து செய்யவுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரவித்துள்ளது.

பொல்கஹவெல - பொத்துஹர இடையிலான வீதியில் மேற்கொள்ளப்படும் திருத்தப்பணி காரணமாக குறித்த புகையிரத மார்க்கம் ஊடான சேவைகள்  மட்டுப்படுத்தவுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொழும்பு கோட்டையில் இருந்து காங்கேசன்துறை, மட்டக்களப்பு, தலைமன்னார் மற்றும் திருகோணமலை நோக்கி புறப்பட இருந்த நான்கு புகையிரத சேவைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளன. 

அதேவேளை காங்கேசன்துறை, மட்டக்களப்பு, தலைமன்னார் மற்றும் திருகோணமலையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணிக்க இருந்த நான்கு புகையிரத சேவைகளும் இவ்வாறு இரத்து செய்யப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.