இராணுவ சீருடைகளை ஒத்த ஆடைகளை தம்வசம் வைத்திருத்தல் தேசிய பாதுகாப்பின் மீது வெகுவாக பாதக தாக்கங்களை ஏற்படுத்தும் எனக் குறிப்பிட்டு சீருடை சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சமர்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இராணுவ சீருடைகளை ஒத்த ஆடைகளை தம்வசம் வைத்திருத்தல் மற்றும் இராணுவ சீருடையை ஒத்த நிறங்களில் ஆடை வடிவமைப்புக்களைச் செய்தல் என்பன அதிகரித்திருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. 

இந்நிலைமை நாட்டின் தேசிய பாதுகாப்பின் மீது வெகுவாக பாதக தாக்கங்களை ஏற்படுத்தும் அதே வேளை அதனை தவிர்ப்பதற்காக தற்போது காணப்படும் சட்டத்தில் நடைமுறைக்கு பொருந்ததத் தக்க வகையில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்று உணரப்பட்டுள்ளது. 

அதன்படி இன்றளவில் ஏற்பட்டுள்ள சவால்களுக்கு முகங்கொடுக்கத் தக்க வகையில் சட்ட மறுசீரமைப்புக்களை ஏற்படுத்தலுக்கு அமைவாக 1895 ஆம் ஆண்டு 6 ஆம் இலக்க சீருடை சட்டத்தில் திருத்தங்களை ஏற்படுத்தல் மற்றும் சீருடை சட்டம் தொடர்பில் புதிய சட்ட மூலம் ஒன்றை உருவாக்குதல் என்பன தொடர்பில் பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சமர்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.