இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கான மூன்று போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர் எதிர்வரும் 26 ஆம் திகதி ஆரம்பமாகிறது.

இந்நிலையில் தொடரில் பங்கேற்கும் பங்களாதேஷ் அணி இன்று நாட்டை வந்தடைந்ததுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்ற பின்பு முதல் தடவையாக சர்வதேச கிரிக்கெட் தொடரில் பங்கேற்க இலங்கை வந்த அணியாக பங்களாதேஷ் கிரிக்கெட் அணி கருதப்படுகின்றது.

இரு அணிகளுக்குமிடையில் 3 போட்டிகளைக்கொண்ட ஒருநாள் தொடர் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.