ஜெயலலிதாவுக்கு கோவையில் கோயில்..!

Published By: Digital Desk 3

20 Jul, 2019 | 05:22 PM
image

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு, கோவையில் 5 லட்சம் ரூபாய் செலவில் கோயிலில் அமைத்து தொண்டர்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர்.

கோவை மாநகராட்சி 100வது வார்டுக்கு உட்பட்ட கணேசபுரம் பகுதியில், அ.தி.மு.க-வின் முன்னாள் கவுன்சிலர் வேணுகோபால் தலைமையிலான தொண்டர்கள் ‘அருள்மிகு ஈசப்பன், கால பைரவர் ஆஞ்சநேயர் திருக்கோயில்’ என்ற பெயரில் ஒரு கோயிலை அமைத்துள்ளனர்.

அந்தக் கோயிலில், சுமார் 8 டன் எடைகொண்ட ஒரே கல்லின் ஒருபுறம் கால பைரவர், ஆஞ்சநேயர் உள்ளிட்ட சுவாமிகளின் உருவங்களும், மறுபுறம் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவமும் செதுக்கப்பட்டுள்ளது.

தினசரி காலை மற்றும் மாலை நேரங்களில், அதிமுக தொண்டர்கள் இங்கு வந்து ஜெயலலிதா மற்றும் சுவாமிகளின் உருவச்சிலைக்கு கற்பூரம் காட்டி வழிபாடு நடத்துகின்றனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், "இந்தப்பகுதியைச் சேர்ந்த தொண்டர்கள் நிதி திரட்டி, 5 லட்சம் ரூபாய் செலவில் இந்தக் கோயிலை அமைத்துள்ளோம். கடந்த சில நாட்களுக்கு முன்னர், தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இந்தக் கோயிலை திறந்து வைத்தார்" என தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01