வடகிழக்கு, கிழக்கு, தென்கிழக்கு மற்றும் தெற்கு உள்ளிட்ட மாகாணங்களில் காற்றின் வேகமானது மணித்தியாலயத்திற்கு 50 தொடக்கம் 60 கிலோ மீற்றர் விடவும் அகிகமாகக் காணப்படும் என குறித்த பிரதேசங்களுக்கு இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

அத்தோடு மன்னார் தொடக்கம் புத்தளம் வழியாக கொழும்பு , காலி மற்றும் அம்பாந்தோட்டை ஆகிய கடற்பிராந்தியங்களில் காற்றின் வேகமானது மணிக்கு 70 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

புத்தளத்திலிருந்து மாத்தறைக்கூடாக கொழும்பு மற்றும் காலி ஆகிய கடற்பரப்பில் கடல் அலையானது 2.5 தொடக்கம் 3.5 மீற்றர் வரை உயர்வடையும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

இந்த சிவப்பு எச்சரிக்கை நாளை காலை 9 மணிவரை அமுலில் இருக்கும். என்பதோடு இந்த அறிவித்தல் கடற்பகுதிகளுக்கு மாத்திரமேயாகும்.