லொறி ஒன்று கட்டுப்பாட்டை இழந்தமையால் 7 முச்சக்கரவண்டிகள் மீது மோதி விபத்துக்குள்ளனா சம்பவம் ஒன்று கொழும்பில் இடம்பெற்றுள்ளது. 

கொழும்பு - ஐந்து லாம்பு சந்தியில் லொறி ஒன்று  வேகக் கட்டுப்பாட்டை இழந்து  பயணித்தமையால் ஏழு முச்சக்கரவண்டிகள் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

குறித்த சம்பவத்தில் ஏழு பேர் காயங்களுக்குள்ளன நிலையில்  சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். 

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்