( எம்.எப்.எம்.பஸீர்)

குருணாகல் போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று மற்றும் பெண்ணியல் நோய்  தொடர்பிலான சிசேஷ்ட வைத்தியர் சேகு சியாப்தீன்  மொஹமட் ஷாபி தொடர்பிலான விசாரணைகளை  சீ.ஐ.டி எனப்படும் குற்றப்பலனாய்வுப்பிரிவிலிருந்து மாற்றுவது பல்வேறு சிக்கல்களை தோற்றுவிக்கும் என பதில் பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.

 அதனால் அந்த விசாரணைகளை வேறு பிரிவு ஒன்றுக்கு  கையளிக்க முடியாது எனவும் பதில் பொலிஸ்மா  அதிபர் சந்தன விக்கிரம ரட்ண  தேசிய  பொலிஸ் ஆணைக்குழுவுக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார். 

வைத்தியர் சாபி விவகாரத்தை  விசேட குழுவொன்றிடமோ  அல்லது  எஸ்.ஐ.யூ எனப்படும்  விசேட விசாரணைபிரிவினரிடமுமோ  கையளிக்க முடியுமா என  பரிந்துரைக்குமாறு  தேசிய  பொலிஸ்  ஆணைக்கு பதில்  பொலிஸ்மா அதிபரை கேட்டிருந்த நிலையிலேயே  இந்த  பதில் அனுப்பபட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பொலிஸ்  அத்தியச்சர் சட்டத்தரணி  ருவான்  குணசேகர  தெரிவித்தார்.