மலையகத்தில் பெய்து வரும் அடை மழை காரணமாக தலவாக்கலை பேர்ஹாம் தோட்டத்தில் ஏற்பட்ட வெள்ளத்தினால் 09 குடும்பத்தைச் சேர்ந்த 44 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

தலவாக்கலை பேர்ஹாம் தோட்டத்தில்  நேற்று இடம்பெற்ற  வெள்ளம் காரணமாக  மரம் முறிந்து விழுந்து வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்தனர்.

வெள்ளத்தினால் 9 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளது. எனினும் உயிராபத்துகள் எதுவும் இல்லையெனவும், சில பொருட்கள் மட்டும் சேதமாகியுள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்தனர்.

இதன்காரணமாக இக்குடியிருப்பில் வசித்து வந்த 44 பேர் வெளியேற்றப்பட்டுள்ளதுடன் இவர்கள்  தோட்ட சிறுவர் நிலையத்தில் தற்காலிகமாக  தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

 பாதிக்கப்பட்ட 44 பேரில் 9 ஆண்கள், 12 பெண்கள், 23 சிறுவர்கள் அடங்குகின்றமை குறிப்பிடதக்கது.