மேற்கிந்திய தீவுகளிற்கான இந்தியஅணியின்  சுற்றுப்பயணத்திலிருந்து விலகியுள்ள இந்திய அணியின் முன்னாள் தலைவர் எம்எஸ் டோனி எனினும் தனது நிரந்தர ஓய்வு குறி;த்து எதனையும் தெரிவிக்கவில்லை என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை தெரிவித்துள்ளது.

இதேவேளை இந்தியாவின் பரசூட் படைப்பிரிவில் கௌரவ அதிகாரியாக உள்ள டோனி அந்த படைப்பிரிவிற்காக பணியாற்றுவதற்காக இரண்டுமாத கால விடுப்பினை கோரியுள்ளார்

நாங்கள் மூன்று விடயங்களை தெளிவுபடுத்தவிரும்புகின்றோம், டோனி தற்போதைக்கு கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறப்போவதில்லை ,ஆனால் அவர் இரண்டு மாத விடுப்பினை கோரியுள்ளார்என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

அவரது இந்த முடிவை விராட்கோலிக்கும் தெரிவுக்குழுவின் தலைவரிற்கும் தெரியப்படுத்தியுள்ளோம் எனவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

தற்போதைக்கு ஓய்வு பெறுவதில்லை என்ற டோனியின்  முடிவு காரணமாக அவரது எதிர்காலம் குறித்து தெரிவுக்குழுவினரே தீர்மானிக்ககூடிய நிலையேற்பட்டுள்ளது என இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.