(எம்.மனோசித்ரா)

நிட்டம்புவ - கலகெடிஹேன பிரதேசத்தில் கடந்த 16 ஆம் திகதி வேனில் சென்ற நபரொருவர் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்துடன் தொடர்புடைய இரு சந்தேகநபர்கள் நேற்று வெள்ளிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டதோடு அவர்களிடமிருந்து டிபென்டர் வாகனமொன்றும் மீட்க்கப்பட்டது.

இந்நிலையில் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலுமொரு சந்தேகநபர் இன்று காலை பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது. 

நிட்டம்புவ - கலகெடிஹேன பிரதேசத்தில் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய WP CAD 8850 இலக்க டிபென்டர் மஹரகம பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. எல்ஹேன வீதியிலுள்ள வீடொன்றுக்கு அருகில் இருந்து இந்த வாகனம் மீட்க்கப்பட்டுள்ளது. 

இதன் போது வாகன சாரதியான 45 வயதுடைய மதுகமை பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவரும் , அந்த வாகனத்திலிருந்த 32 வயதுடைய பிரிதொரு நபரும் கைது செய்யப்பட்டு பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

நிட்டம்புவ சம்வத்துடன் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 44 வயதுடைய, தல்கஸ்தொல பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்று பொலிஸார் தெரிவித்தனர். 

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய 4 சந்தேக நபர்கள் இது வரையில் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இவர்கள் இன்று அத்தனகல நீதவான் நீதிமன்றத்தில் முன்னிப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.