சிவகார்த்திகேயன் நடித்து வரும் ‘ஹீரோ ’படத்தில் வில்லனாக நடிக்க பொலிவவூட் நடிகர் அபய் தியோல் ஒப்பந்தமாகியிருக்கிறார்.

தமிழ் சினிமா வரலாற்றில் முன்னணி நடிகர்கள் தங்களின் கதாநாயக பிம்பத்தை ரசிகர்களிடத்தில் நிரூபிப்பதற்காக தமிழ் மண்ணைச் சாராத அன்னிய முகத் தோற்றமுடைய குறிப்பாக வட இந்திய தோற்றமுடைய நடிகர்களை வில்லன்களாக்கி, அவர்களை வீழ்த்தி, தங்களது ஹீரோயிஸத்தை ரசிகர்களின் கைத்தட்டல்களுடன் அரங்கேற்றுவார்கள். கமல்ஹாசன், ரஜினிகாந்த், விஜய்காந்த், விஜய், அஜித், சூர்யா, விக்ரம் என அத்தகைய முன்னணி நடிகர்களின் பட்டியலில் தற்போது சிவகார்த்திகேயனும் இணைந்திருக்கிறார்.

இரும்புத்திரை என்ற வெற்றிப்படத்தை இயக்கி, அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்த இயக்குநர் பி எஸ் மித்ரன் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடித்து வரும் ‘ஹீரோ’ படத்தில், அவருடன் மோதும் வில்லனாக நடிக்க பொலிவூட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அபய் தியோல் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மூத்த இயக்குனரின் வாரிசான கல்யாணி பிரியதர்சன் அறிமுகமாகிறார்.

இதனிடையே பொலிவூட் நடிகர் அபய் தியோல் ‘இது வேதாளம் சொல்லும் கதை’ என்ற படத்தின் மூலம் தமிழில் ஏற்கெனவே அறிமுகமாகியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.