நிதி அமைச்சின் ஆத­ர­வுடன் ஆசி­ரி­யர்­களின் சம்­பள முரண்­பா­டு­களை விரைவில் தீர்ப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுப்­ப­தாக கல்வி அமைச்சர்  அகிலவிராஜ் காரி­ய­வசம் தெரி­வித்­துள்ளார்.

அரு­கி­லுள்ள பாட­சாலை சிறந்த பாட­சாலை அபி­வி­ருத்தி வேலைத்­திட்­டத்தின் கீழ் 55 மில்­லியன் ரூபா செலவில் கிரி­உல்ல, ஹென்­டி­ய­கல, ரத்­ன­பால மஹா வித்­தி­யா­ல­யத்தில் புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­பட்ட ஆரம்ப கற்றல் வள நிலையம், விஞ்­ஞான ஆய்­வு­கூடம் மற்றும் தொழில்­நுட்ப கட்­டி­டத்தை மாண­வர்­க­ளிடம் கைய­ளிக்கும் நிகழ்வு நேற்று நடை­பெற்­றது.  இந்த நிகழ்வில்  கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அமைச்சர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.  அமைச்சர் அங்கு மேலும் உரை­யாற்­று­கையில்,

ஆசி­ரி­யர்கள் மற்றும் அதி­பர்­களின் சம்­பளம் அதி­க­ரித்த விதம் தொடர்பில் அண்­மையில் பத்­தி­ரி­கை­களில் விளம்­பரம் வெளி­யிட்டோம். நாம் ஆசி­ரி­யர்கள்  மற்றும் அதி­பர்­களின் சம்­ப­ளத்தை 106 சத­வீ­த­மாக அதி­க­ரித்­துள்ளோம். முதலாம் வகுப்பு ஆசி­ரி­யர்­களின் ஆரம்ப சம்­பளம் 21,750 ரூபா­வா­கவே காணப்­பட்­டது. எனினும் தற்­போது சிரேஷ்­டத்­து­வத்தின் பிர­காரம் கொடுப்­ப­ன­வு­க­ளுடன் 81,950 ரூபா வரை முழு சம்­ப­ள­மாக பெற­மு­டியும். அதி­பர்­களின் சம்­ப­ளத்­தையும் அதே­போன்று அதி­க­ரித்­துள்ளோம். அரச ஆசி­ரி­யர்­களின் ஒய்­வூ­தியம் 2800 ரூபாவில் இருந்து 20,000 ஆக அதி­க­ரித்­துள்ளோம். 1000, 2000 ரூபா­வுக்­காக போராட்டம் நடத்­தி­யோ­ருக்கு தற்­போது எந்­த­வொரு குற்­றச்­சாட்­டு­க­ளையும் முன்­வைக்க முடி­யாது. மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவிப்போர் மனசாட்சியை தொட்டுபார்த்தால் குறித்த வேலைநிறுத்தம் அநியாயம் என்றே உணர்ந்து கொள்வார்கள் என்றார்.