துருக்கியின் கிழக்கு பகுதியில் ஈரான் நாட்டின் எல்லையையொட்டி அமைந்துள்ள வான் மாகாணத்தில் இருந்து 40 க்கும் மேற்பட்ட அகதிகளை ஏற்றிக்கொண்டு சென்ற பஸ் விபத்துக்குள்ளானதில் 17 பேர் பலியாகியுள்ளனர்.

பாகிஸ்தான் ம ற்றும் ஆப்கானிஸ்தான் ,வங்காளதேச நாடுகளை சேர்ந்தவர்கள் ஆவர். ஓஸ்ப் நகருக்கு அருகே சென்று கொண்டிருந்தபோது, பஸ் திடீரென சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் விழுந்துள்ளது.

இதனால் 20 க்கும் மேற்பட்ட பயனிகள் காயமடைந்துள்ளதோடு , 17 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.