இரட்டை சகோதரிகளின் உயிரை குடித்த வெள்ளம்: யார் பொறுப்பு?

Published By: Digital Desk 3

20 Jul, 2019 | 12:20 PM
image

தான் பெற்ற இரட்டை செல்­வங்­களை கட்­டி­ய­ணைத்து கதறும் அந்த தாய் அன்பு பிள்­ளை­களை இழந்து துடி­து­டித்து நிற்கும் தந்தை. ஒன்று கூடி வாழ்ந்த அந்த இளம் சிட்­டுக்­களை பிரிந்து, இன்று கண்ணீர் சிந்தும் தோட்­டத்து மக்கள். இவர்­களின் மன வேத­னைக்கும் வலிக்கும் யார் தான் ஆறுதல் கூறு­வார்கள்.

ஆம்..!  அக்­க­ர­பத்­தனை, டொரிங்டன்- அலுப்­பு­வத்தை தோட்­டமே இன்று சோகத்தில் ஆழ்ந்­துள்­ளது.

பாட­சாலை சென்று ஆசை­யாக வீடு திரும்­பிய இரட்டை சகோ­த­ரிகள், இடை­ந­டுவில் வெள்ள நீரில் அடித்துச் செல்­ல­பட்­டுள்­ள­மை­யா­னது ஒரு சமூ­கத்தை மாத்­திரம் அல்லாது நாட்­டையே அதிர்ச்­சிக்­குள்­ளாக்­கி­யுள்­ளது.

கடந்த புதன்­கி­ழமை(17) முதல் மலை­ய­கத்தில் கடு­மை­யான மழை பெய்து வரு­கின்­றது. இந்­நி­லையில் கடந்த வியா­ழக்­கி­ழமை (18) டொரிங்டன் பாட­சா­லையில் தரம் 7 இல் கல்வி கற்றுவந்த இரட்டை சகோ­த­ரி­க­ளான 12 வய­து­டைய மதி­ய­ழகன் லெட்­சுமி, மதி­ய­ழகன் சங்­கீதா ஆகிய மாண­விகள், அந்த பிர­தே­சத்தை சேந்த மற்­று­மொரு மாண­வனுமாக வழமை போன்று சந்­தோ­ச­மாக பாட­சாலை சென்று வீடு திரும்­பி­யுள்­ளனர்.மாண­விகள் பாட­சாலை விட்டு வீட்­டுக்கு செல்லும் பாதையில் நீரோடை பாதை­யில் ­பெ­ருக்­கெ­டுத்­துள்­ளது.

இதன்­போது மாண­வி­க­ளுடன் சென்ற மாணவன் ஒரு­வாறு பாதையை கடந்­துள்ளான். இதனை பார்த்த இரு மாண­வி­களும் ஒருவர் ஒரு­வ­ரது கைகளை கோர்த்துக் கொண்டு பாதையை கடக்க முற்­பட்­டுள்­ளனர்.ஆனால் இரு­வரும் ஒன்­றாக நீரோ­டைக்குள் விழுந்து அடித்து செல்­லப்­பட்டு பரி­தா­ப­மாக உயி­ரை­ விட்­டுள்­ளனர்.

தகவல் அறிந்து சம்­பவ இடத்­திற்கு விரைந்த பிர­தேச மக்­களின் கடு­மை­யான தேடுதல் நட­வ­டிக்­கையின் பின், மதி­ய­ழகன் லெட்­சுமி என்ற மாணவி சம்­பவ தினத்­தன்று மாலை ஐந்து மணி­ய­ளவில் உயி­ரி­ழந்த நிலையில் 800 மீற்றர் பள்­ளத்தில் சட­ல­மாக மீட்­டுள்ளார்.

காணாமல் போன மற்­று­மொரு மாண­வி­யான மதி­ய­ழகன் சங்­கீதா இரண்­டா­வது நாளான நேற்று வெள்­ளிக்­கி­ழமை (19) உயி­ரி­ழந்த நிலையில் கண்­டுப்­பி­டிக்­கப்­பட்டார்.

சோக­ம­ய­மான அலுப்­பு­வத்தை

இரட்டை சகோ­த­ரி­களின் பிரிவால் அலுப்­பு­வத்தை தோட்­டமே சோகத்தில் காட்­சி­ய­ளிக்­கின்­றது. அங்­குள்ள ஒவ்­வொரு தாயுள்­ளமும் கதறி அழு­கின்­றது. யாரும் வேலைக்கு செல்­வில்லை. தோட்­டமே சோகத்தில் குடி­கொண்­டுள்­ளது. குறிப்­பாக ஐந்து தோட்­டங்கள் இன்று முடங்கி கிடக்­கின்­றன. யாரும் வேலைக்கு செல்­ல­வில்லை.

டொரிங்டன் பாட­சாலை

டொரிங்­கடன் பாட­சா­லையில் தரம் 9 வரை கல்வி நட­வ­டிக்­கைகள் இடம்­பெ­று­கின்­றன. இந்த பாட­சா­லைக்கு ஐந்து தோட்­டங்­களைச் சேர்ந்த பிள்­ளைகள், கல்வி கற்­ற­லுக்­காக குறித்த மாண­விகள் சென்ற பாதை­யையே பயன்­ப­டுத்­து­கின்­றனர்.

ஆபத்­தான இரு­பா­லங்கள்

ஐந்து தோட்­டங்­களை சேர்ந்த மக்கள் மாண­விகள் காவு­கொள்­ளப்­பட்ட பாதை­யையே பிர­தான போக்­கு­வ­ரத்து பாதை­யாக பயன்­ப­டுத்­து­கின்­றனர். இந்த பாதையில் இரண்டு இடங்­களில் பாது­காப்­பற்ற பாலங்கள் காணப்­ப­டு­வ­தாக பிர­தேச மக்கள் தெரி­விக்­கின்­றனர்.

மாண­வர்­களை காவு­கொண்ட பாலம்

பாலம் ஆரம்­பத்தில் கல்­பாலம் என அழைக்­கப்­பட்­டுள்­ளது. பின்னர் அந்த இடத்தில் இருந்த கல்லை அகற்­றா­ம­லேயே பாலத்தை அமைத்­துள்­ளனர்.

மழை காலங்­களில் நீரில் அடித்து வரப்­படும் குப்­பைகள் தேங்­கு­வதால் நீர் பாதைக்கு மேலாக நிரம்பி செல்­கின்­றது.

மக்கள் முறைப்­பாடு

இந்த விடயம் தொடர்பில் தோட்ட நிர்­வா­கத்­துக்கும் அர­சி­யல்­வா­தி­க­ளுக்கும் பிர­தேச மக்கள் பல முறை முறைப்­பாடு செய்­துள்­ளனர். எனினும் எந்த அதி­கா­ரி­களும் இது­தொ­டர்பில் நட­வ­டிக்கை எடுக்­க­வில்லை.

யார் பொறுப்பு

இந்த சம்­ப­வத்­திற்கு ஒரு தரப்பை மாத்­திரம் விரல் நீட்டி குற்றம் சுமத்­தி­விட முடி­யாது. ஆனால் இந்த சம்­ப­வ­மொன்றும் எமக்கு புதி­தல்ல.

கடந்த வரு­டத்தில் கந்­தப்­பளை பகு­தியில் பாட­சாலை மாணவி ஒருவர் பாட­சாலை விட்டு வீட்­டுக்கு போகும் வழியில் வெள்ள நீரில் அடித்து செல்­லப்­பட்டு உயி­ரி­ழந்தார். அதே போன­்ற­தொரு சம்­பவம் தான் இன்று அக்­கர­பத்­தனை அலுப்புவத்­தை­யிலும்  பதி­வா­கி­யுள்­ளது.

அர­சி­யல்­வா­திகள்

எந்த சம்­ப­வத்தை எடுத்­தாலும் அர­சி­யல்­வா­தி­க­ளைத்தான் குறை கூறு­கின்றோம் எனக் கூற முடி­யாது. மக்­க­ளுக்கு சேவை செய்ய ஒவ்­வாரு அர­சி­யல்­வா­தியும் அந்த மக்­களின் வாக்­கு­களைப் பெற்று பாரா­ளு­மன்றம் செல்­கின்றார். ஆனால் இது­போன்ற துர­திஸ்­ட­மான சம்­ப­வங்கள் அரங்­கே­றும்­போது அதற்கு முழுப்பொறுப்பு கூற வேண்­டிய கடப்­பாடும் அர­சி­யல்­வா­தி­க­ளுக்கே உள்­ளது.

குறிப்­பாக மலை­ய­கத்தில் பெரும்­பா­லான பாதைகள் குன்றும் குழி­யு­மாக காணப்­ப­டு­வதால் மழை­ கா­லங்­களில் நீர் நிரம்பி சேறும் சக­தி­யு­மா­கத்தான் காணப்­படும். அதா­வது பாதை­களில் பய­ணிப்­பது என்­பது ஆபத்­தான விட­ய­மா­கத்தான் இருக்கும்.

இதனை மலை­யக அர­சி­யல்­வா­திகள் நன்கு அறிந்து வைத்­துள்­ளார்கள். இருந்தும் அதற்கு தீர்வுத் திட்­டங்­களை அவர்கள் வழங்­கு­வ­தில்லை.

ஒரு பிர­தே­சத்தின் அபி­வி­ருத்­தியில் முக்­கிய பங்கு வகிப்­பது வீதி கட்­ட­மைப்­பாகும். ஆனால் மலை­ய­கத்தில் தோட்டப் பகு­தி­களில் அவை தலை­கீ­ழா­கவே காணப்­ப­டு­கின்­றன.

ஒவ்­வொரு நாளும் மக்கள் உயிர் ஆபத்­து­டனேயே பாதை­களில் பய­ணிக்கும் நிலைமை ஏற்­பட்­டுள்­ளது.

பாதை­களை புன­ர­மைத்து தரும் பொறுப்பு அர­சி­யல்­வா­தி­க­ளி­டமே இருந்தும் அவர்கள் அதனை மும்­மு­ர­மாக செய்­வ­தில்லை. பிர­தேச மக்­களால் பல முறைப்­பா­டுகள் செய்தும் யாரும் அதனை கவ­னத்தில் கொள்­ள­வில்லை.

ஒரு­வேளை தோட்டத் தொழி­லா­ளியின் பிள்ளை தானே இறக்­கின்­றது என ஏள­ன­மாக நினைத்து விடு­கின்­றார்கள் போலும்.

தோட்ட நிர்­வாகம்

ஒவ்­வொரு தோட்­டத்­திலும் வடி­கா­ல­மைப்பை சரி­யான முறையில் அமைப்­பது தோட்ட நிர்­வா­கத்தின் பொறுப்­பாகும். வெ ள்ளத்தில் மாண­வர்கள் அடித்துச் செல்­லப்­பட்­டுள்­ளார்கள் எனக்கூறும் போது அந்த தோட்­டத்தில் வடி­கா­ல­மைப்பு எவ்­வாறு இருக்கும் என்­பதை விளங்­கிக்­கொள்ள முடி­கின்­றது. இந்த மாண­வியரின் மர­ணத்­துக்கு தோட்ட நிர்­வா­கத்துக்கும் பொறுப்புக்கூற வேண்­டிய கடப்­பாடு உள்­ளது.

பெற்­றோர்

மழை­ கா­லங்­களில் பிள்­ளைகள் பாட­சாலை செல்லும் போதோ அல்­லது வீட்டை விட்டு வெளியில் செல்­லும்­போதோ பெற்­றோர் தமது பிள்­ளைகள் தொடர்பில் அவ­தா­ன­மாக இருக்க வேண்டும். மழை­கா­லங்­களில் ஆபத்­துக்­களில் இருந்து எவ்­வாறு பாது­காப்­பாக இருப்­பது என்பது தொடர்­பாக அவர்­க­ளுக்கு அறி­வு­ரை­களை வழங்க வேண்டும். குறிப்­பாக மழை­ கா­லங்­களில் பெற்­றோரே பிள்­ளை­களை பாது­காப்­பாக கூட்டிச் சென்று கூட்டி வரு­வது சிறப்­பா­ன­தாகும். உயிர் பிரிந்­த­வுடன் எதை செய்தும் பயன் இல்லை.

பாட­சாலை

குறிப்­பாக மழை­ கா­லங்­களில் பாட­சாலை முடிந்து மாண­வர்கள் பாது­காப்­பாக செல்லும் நிலை இருக்­கின்­றதா இல்­லையா என்­பதை பாட­சாலை நிர்­வா­கமும் அறிந்­தி­ருக்க வேண்டும். பாட­சாலை முடிந்­த­வுடன் பெற்­றோர் பாட­சாலை வந்து பிள்­ளை­களைக் கூட்டிச் செல்லும் வரையில், மாண­வர்கள் பாட­சா­லை­யி­லேயே தங்­கி­யி­ருக்க ஏற்­பா­டு­களை செய்­து­கொ­டுக்க வேண்டும்.

மழை காலங்களில் மலையகத்தில் ஏதோ ஒருவகையில் உயிர்கள் காவு கொள்ளப்படுகின்றன. மண்சரிவாக இருக் கலாம் அல்லது வெள்ளமாக இருக்கலாம். இந்த அனர்த்தங்கள் திடீரென வந்து விடுகின்றன.இருந்தும் இதற்கு முகம் கொடுக்கும் வகையில் முன் ஆயத்தமாக இருக்க வேண்டியது ஒவ்வொருவரின் பொறுப்பாகும்.

தமது பிள்ளைகளை பிரிந்து அந்த பெற்றோர் கதறி அழுகின்றார்கள். ஊர் மக்களும் கண்ணீர் வடிக்கின்றார்கள். ஆனால் அந்த பிரிந்த உயிர்கள் மீண்டும் வரப்போவதில்லை. எனவே ஒருவரை ஒருவர் குற்றம் சுமத்துவதை விட எதிர்காலத்தில் இதுபோன்ற துர்பாக்கிய சம்பவங்கள் இடம்பெறாமல் இருக்க ஒவ்வாரு நபரும் சமூக பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும்.

எம்.டி. லூசியஸ் –

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04
news-image

ஒற்றுமை பற்றி பேசிப்பேசியே பிளவுபட்ட முஸ்லிம்...

2024-03-25 14:21:50
news-image

பிசுபிசுத்த நம்பிக்கையில்லா பிரேரணை

2024-03-25 14:16:49