மொழிக் கொள்கையின் ஊடாகவே  தேசிய நல்லிணக்கத்தை  கட்டியெழுப்ப முடியும் : சபாநாயகர்

Published By: R. Kalaichelvan

20 Jul, 2019 | 09:31 AM
image

(இராஜதுரை ஹஷான்)

நாடு என்ற ரீதியில் முன்னேற்றமடைய வேண்டுமாயின் தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கில மொழிக்கு இணையாக பிறிதொரு மொழியில் அனைத்து மக்களும்  தேர்ச்சிப் பெற வேண்டும்.

மொழிக் கொள்கையின் ஊடாகவே  தேசிய  நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப  முடியும் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார்

கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சையில் இரண்டாம் மொழி பாடங்களில்  சித்தியடைந்த மாணவர்களுக்கு சான்றிதழ்  வழங்கும் நிகழ்வு நேற்று  முன்தினம்  அலரி மாளிகைளில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இடம்  பெற்றது. இந்நிகழ்வில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தேசிய  நல்லிணக்கத்தை  கட்டியெழுப்புவதற்கு அரசியலுக்கு அப்பாற்பட்ட சேவைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளது. அனைத்து  அரச திணைக்களங்களிலும் அரச கரும மொழிகளாக தமிழ் , சிங்கள மொழிகள்  கட்டாயமாக்கப்பட்டு  உரிய செயற்திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

நாட்டில் மும்மொழிகளில் மாத்திரம் தேர்ச்சிப் பெற்றால் போதாது  மாறிவரும் உலக  நடத்தைகளுக்கு ஏற்ப அனைத்து   துறைகளிலும் முன்னேற்றமடைய வேண்டும். அதற்கு   பல்லின மொழிகளிலும் தேர்ச்சிப் பெறுதல் அவசியமாகும்.   

வழக்கில் உள்ள  மூன்று மொழிகளை  காட்டிலும் மேலதிகமாக   பிறிதொரு அங்கிகரிக்கப்பட்ட மொழியினை    நடைமுறைப்படுத்துவயத காலத்தின் தேவையாகும். இதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இனங்களுக்கிமையில்  நல்லுறவினையும், பரஸ்பர நிலையினையும் மொழிகளின் ஊடாகவே  மேம்படுத்த முடியும். தேசிய   நல்லிணக்கமே  ஒரு  நாட்டின்  ஒற்றுமைக்கான  பிரதான  இலட்சினம்.  தேசிய  நல்லிணக்கத்தை  வலுப்படுத்த முன்னெடுத்துள்ள  திட்டங்கள் தொடர்ந்து  முன்னேடுத்து செல்வது  அவசியமாகும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மது போதையில் அநாகரீகமாக செயற்பட்ட பொலிஸ்...

2024-12-10 10:31:39
news-image

ரயில் - மோட்டார் சைக்கிள் மோதி...

2024-12-10 10:17:11
news-image

வலம்புரி சங்குகளுடன் இருவர் கைது!

2024-12-10 10:06:38
news-image

யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன்...

2024-12-10 10:03:38
news-image

இறக்குமதி அரிசிக்கான விலையை நிர்ணயித்து வர்த்தமானி...

2024-12-10 09:16:17
news-image

இன்றைய வானிலை 

2024-12-10 06:56:10
news-image

உதயங்க வீரதுங்க - கபிலசந்திரசேனவிற்கு அமெரிக்கா...

2024-12-10 06:19:13
news-image

உரிய முறைக்கு புறம்பாக எவருக்கும் மதுபான...

2024-12-10 02:33:23
news-image

பெருவணிகர்கள் அரிசி உற்பத்தியை வியாபாரமாக்குவதற்கு இடமளிக்காதீர்கள்...

2024-12-10 02:14:11
news-image

அமைச்சரவையில் முஸ்லிம்கள் பிரதிநிதித்துவம் உள்வாங்கப்படாமை குறித்து...

2024-12-10 02:11:03
news-image

நீர் மின் உற்பத்தி அதிகரித்துள்ளதால் மின்சாரசபைக்கு...

2024-12-10 02:07:37
news-image

மனித உரிமைகள் தினம்: வலிந்து காணாமலாக்கப்பட்டோரின்...

2024-12-10 01:55:54