(செ.தேன்மொழி)

கொழும்பு - கண்டி பிரதான வீதியில் கலகெடிஹேன பகுதியில் சென்ற வேன் ஒன்றின் சாரதியை முக்கிய பிரமுகர் வாகனங்கள் இரண்டில் வந்தவர்கள் தாக்கியதாக குறிப்பிடப்படும் சம்பவம் தொடர்பில் விசாரணைககளை கொழும்பு குற்றப்பிரிவினரை மேற்கொள்ளுமாறு பதில் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன பணிப்புரை விடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

கலகெடிஹேன பகுதியில் நேற்று வேன் ஒன்றின் சாரதியொருவரை முக்கிய பிரமுகர்கள் பாதுகாப்பு பிரிவினருக்கு ஒத்த ஆடையை அணிந்திருந்த நபர்களால் தாக்கியதாக குறிப்பிடப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகள் கொழும்பு குற்றப் பிரிவினருக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சி.ஏ.ஜி 0550 என்ற இலக்கத் தகடை கொண்ட வெள்ளைநிற கெப் வண்டியில் வந்தவர்களும் , சி.ஏ.டீ 8850 என்ற இலக்கத் தகடை கொண்ட டிபெண்டர் வண்டிகள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதேவேளை குறித்த பிரமுகர் வாகனங்களை முன்னோக்கி செல்ல விடாததனாலேயே இவ்வாறு வேனின் சாரதி தாக்கப்பட்டதாக சாரதி தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.