கடவுச்சீட்டை முடக்கி அர்ஜுன் அலோசியஸ் உள்ளிட்ட எட்டு பேருக்கு பிணை 

Published By: Vishnu

19 Jul, 2019 | 05:50 PM
image

(செ.தேன்மொழி)

மத்திய வங்கி பிணைமுறி மோசடிகள் தொடர்பில் முதலாவது சந்தேக நபரான அர்ஜூன மகேந்திரனுக்கு எதிராக பிடியானை பிறப்பிக்குமாறு சட்டமா அதிபர் கோரிக்கை விடுத்துள்ளார். 

பிணைமுறி மோசடி தொடர்பான விசாரணைகள் இன்று நிரந்தர நீதாய மேல் நீதிமன்றத்தில் மூவரடங்கிய நீதிபதிகள் முன்னிலையில் எடுத்துக்கொண்ட போதே இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. 

இதேவேளை பிணைமுறி மோசடி தொடர்பில் அர்ஜுன் அலோசியஸ் உள்ளிட்ட எட்டு பேருக்கு மேல் நீதிமன்றத்தின் நீதியரசர்களான சம்பத் அபேகோன், சம்பத் விஜயரத்ன மற்றும் சம்பா ஜானகி ராஜரத்ன ஆகியோர் பிணை வழங்கினர்.   

இதன்போது மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் மற்றும் 10வது பிரதிவாதியான அஜகான் கார்திய புஞ்சிஹேவா ஆகியோர் நீதி மன்றில் ஆஜராகி இருக்கவில்லை என்பதுடன்  அவர்கள் சார்பில் சட்டத்தரணிகளும் ஆஜராகியிருக்க வில்லை . 

நீதிமன்றில் ஆஜரான ஏனைய எட்டு பிரதிவாதிகளுக்கு எதிராகவும்  குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதோடு 10 இலட்சம் ரூபா ரொக்கப் பிணையிலும் 25 இலட்சம் ரூபாவான இரண்டு சரீரப் பிணையிலும் விடுவிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 

வெளிநாடு செல்ல பிரதிவாதிகளுக்கு தடை விதிக்கப்பட்டது . அவர்களின் கடவுச்சீட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்கவும் உத்தரவிடப்பட்டது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறைச்சாலை நெரிசலைக் குறைக்க அபின் மற்றும்...

2026-07-14 16:58:44
news-image

அரசியலமைப்புடன் விளையாடுவது ஜனநாயகத்தை சீர்குலைக்கும் செயல்;...

2026-07-14 15:42:45
news-image

நீதித்துறையை ஆக்கிரமித்து எதிர்க்கட்சிகளை முடக்க அரசு...

2026-07-14 17:44:19
news-image

அரசை விமர்சித்து சரியான பாதைக்கு திருப்புவோம்;...

2026-07-14 14:22:50
news-image

204 மில்லியன் பெறுமதியான அதிநவீன ஆய்வக...

2026-07-14 14:27:28
news-image

நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவத்துக்கு பரிந்துரைகள் அமுல்படுத்தாததே...

2026-07-14 14:35:40
news-image

இலங்கை மற்றும் தான்சானியாவின் நீரியல் வளர்ப்புத்...

2026-07-14 22:02:43
news-image

முன்னாள் கட்டார் நாட்டின் தலைவரின் இறுதிச்சடங்கில்...

2026-07-14 21:57:06
news-image

விவசாயிகளுக்கு சலுகைக் கடன் வழங்க புதிய...

2026-07-14 18:25:14
news-image

ஜே.வி.பி அரசாங்கத்தின் போலித்தனம் அம்பலம் ;...

2026-07-14 18:26:52
news-image

உளவுத்துறை மதிப்பீட்டு அறிக்கையின் அடிப்படையிலேயே பிரமுகர்...

2026-07-14 18:25:38
news-image

புதிய தமிழ் - முஸ்லிம் கட்சிகளின்...

2026-07-14 18:24:09