(நா.தனுஜா)
அம்பாந்தோட்டை துறைமுகத்தின் கேந்திர அமைவிடம் உலகளாவிய கடல்வழிப் போக்குவரத்தின் இதயமாகக் காணப்படுவதுடன் அது எந்தவொரு முதலீட்டாளருக்கும் பாரிய வாய்ப்பை வழங்குவதாக உள்ளது என்று இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் எரிக் லவெட்ரூ தெரிவித்திருக்கிறார்.
பிரான்ஸ் தூதுவர் எரிக் லவெட்ரூ எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவை அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று வெள்ளிக்கிழமை சந்தித்தார். இச்சந்திப்பின் போது அண்மையில் இடம்பெற்ற பிரான்ஸ் தேசிய தின நிகழ்விற்கு மஹிந்த ராஜபக்ஷ வருகை தந்தமைக்கு தனது நன்றியை பிரான்ஸ் தூதுவர் வெளிப்படுத்தினார்.
மேலும் வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையிலான உறுதிப்பாட்டை அரசியல் மற்றும் பொருளாதாரக் கொள்கைகள் வழங்குமாக இருந்தால், இலங்கையில் பெருமளவான முதலீட்டு வாய்ப்புக்கள் உருவாகும் என்றும் தூதுவர் எரிக் லவெட்ரூ சுட்டிக்காட்டினார். அத்தோடு பிரான்ஸ் முதலீட்டாளர்கள் அம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் பெருந்தோட்டத்துறை என்பவற்றில் முதலீடு செய்வதற்கு வெகுவாக ஆர்வம் காட்டுவதாகவும் குறிப்பிட்டார்.
அம்பாந்தோட்டை துறைமுகத்தின் கேந்திர அமைவிட முக்கியத்துவம் தொடர்பில் பேசிய தூதுவர், அந்த அமைவிடம் உலகலாவிய கடல்வழிப் போக்குவரத்தின் இதயமாகக் காணப்படுவதுடன் அது எந்தவொரு முதலீட்டாளருக்கும் பாரிய வாய்ப்பை வழங்குவதாக உள்ளது என்றும் கூறினார்.
அம்பாந்தோட்டை துறைமுகம் குறித்த பிரான்ஸ் தூதுவரின் கருத்தை ஆமோதித்த எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, முதலீடுகளை அதிகரிப்பதற்கு வரி விதிப்புக் கொள்கைகளில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM