தபால் சேவைகள் சங்கத்தினரின் அடையாள வேலைநிறுத்தம் நேற்று இரவு 08.00 மணிக்கு கைவிடப்பட்டதாக ஒன்றிணைந்த தபால் சேவைகள் தொழிற்சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார்.
சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட தமது கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்க தபால் சேவைகள் அமைச்சர் அப்துல் ஹலீம் இணக்கம் தெரிவித்துள்ளதாக ஒன்றிணைந்த தபால் சேவைகள் தொழிற்சங்கம் கூறியுள்ளது.
இதனால் கடந்த 16 ஆம் திகதி ஆரம்பித்த அடையாள வேலைநிறுத்தம் நேற்று இரவு 08.00 மணிக்கு கைவிடப்பட்டதாக ஒன்றிணைந்த தபால் சேவைகள் தொழிற்சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார்.
தபால் சேவைகள் அமைச்சர் அப்துல் ஹலீம் மற்றும் தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்னவுடன் தமது கோரிக்கைகள் சம்பந்தமாக நேற்று மாலை பேச்சுவார்ததை நடத்தியதாக அவர் தெரிவித்தார்.
அதன்போது எழுத்து மூலம் வழங்கப்பட்ட உடன்பாட்டுக்கு அமைய வேலைநிறுத்தம் கைவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM