சூரியவெவ, 11 ஆவது மைல் கல் பகுதியில் மரம் ஒன்று  முச்சக்கர வண்டி மீது முறிந்து விழுந்ததில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த பகுதியூடாக பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கவண்டியின் மீது எதிர்பாராத விதத்தில் மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் 31 வயதுடைய தாயும் அரவது 3 வயதுடைய மகளும் 9 வயதுடைய மற்றுமொரு  சிறுமியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அத்தோடு நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் பெரும்பாலன பகுதிகளில் இவ்வாறான உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.