(எம்.ஆர்.எம்.வஸீம்)

யுத்தத்தில் உயிரழந்த படைவீரர்களின் குடும்பங்களுக்கும் பாதிக்கப்பட்ட வீரர்களுக்கும் பாதுகாப்பு அமைச்சு மற்றும் முப்படைகளின் ஒத்துழைப்புடன் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளை கையளிக்கும் நிகழ்வு எதிர்வரும் 22 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் சுகததாச உள்ளக அரங்கில்  மாலை 4 மணிக்கு இடம்பெறுகின்றது.

கடந்த 2010ஆம் ஆண்டுமுதல் இதுவரை நிர்மாணிக்கப்பட்ட வீடுகளே இவ்வாறு கையளிக்கப்படுவதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டேகொட தெரிவித்தார்.