(ஆர்.யசி)

ஆட்சிமாற்றத்தின் மூலம் நாட்டில் ஏற்பட்டுள்ள ஜனநாயக சூழலையும் அரசாங்கத்தின் மென்மையான போக்கையும் சாதகமாக பயன்படுத்தி இனவாதத்தின் மூலமாக நாட்டை பிளவுபடுத்த வடமாகாண சபையினரும், விக்கினேஸ்வரனும் முயற்சிக்கின்றனர். இவர்களது செயற்பாடுகள் தொடர்பில் அரசாங்கம் மௌனம் காப்பது மீண்டுமொரு போராட்டம் வரையில் சென்றடையும் என ஜாதிக ஹெல உறுமைய கட்சி எச்சரித்துள்ளது.

எதிர்க் கட்சித் தலைவர் என்ற ரீதியில் சம்பந்தன் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் எனவும் அக்கட்சியினர் குறிப்பிட்டனர். 

வடமாகாண சபையின் பிரேரணையை தோற்கடிக்க சகல மாகாண சபைகளும் முன்வர வேண்டும். 

தமது எதிர்ப்புகளின் மூலமாக வடமாகாண சபையின் செயற்பாடுகளை தடுக்க வேண்டும் என ஜாதிக ஹெல உறுமைய கட்சி தெரிவித்துள்ள  நிலையில் அது தொடர்பில் வினவியபோதே கட்சியின் தலைவர் ஓமல்பே சோபித தேரர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.