ஈரானின் ஆளில்லா விமானத்தை சுட்டுவீழ்த்த அமெரிக்கா பயன்படுத்திய நவீன ஆயுதம் - புதிய தகவல்

Published By: Rajeeban

19 Jul, 2019 | 04:19 PM
image

ஈரானின் ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்துவதற்குஅமெரிக்கா   நவீன ரக ஆயுதமொன்றை பயன்படுத்தியது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

அனைத்து வகையான வாகனங்களிலும் பொருத்தி பயன்படுத்தக்கூடிய அமெரிக்க கப்பல்களில் இருந்து  எதிரி விமானங்களின் நடமாட்டத்தை கண்காணிக்க கூடிய மரைன் படையணியின் புதிய ஆளில்லா விமான எதிர்ப்பு ஆயுதத்தையே அமெரிக்கா பயன்படுத்தியுள்ளது.

எல்எம்ஏடிஐஎஸ் என்ற ஆயுதமே அமெரிக்க கடற்படை கப்பலி;ற்கு அருகில் சென்ற ஈரானின் டிரோனை செயல் இழக்க செய்வதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாக  இராணுவ இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கலிபோர்னியாவை சேர்ந்த மரைன் படைப்பிரிவின் விசேட படையணியொன்று இந்த வகை ஆயுதங்களுடன் மத்திய கிழக்கில் நிலை கொண்டுள்ளது என பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

2200 பேரை கொண்ட இந்த படையணி தற்போது அமெரிக்காவின் கடற்படை கப்பலான யுஎஸ் பொக்சரில் உள்ள விசேட படையணியொன்றுடன் இணைந்து செயற்படுகின்றது எனவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட வகை ஆயுதத்தை நிலத்திலே பயன்படுத்துவது வழமை எனினும் தற்போது பல கப்பல்களில் பொருத்தி அமெரிக்கா பரிசோதனை செய்கின்றது என அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட ஆயுதத்தினால் ராடார்கள் மற்றும் கமராக்களை பயன்படுத்தி வான்வெளியில் பறக்கும் விமானங்களை கண்காணிக்க முடியும் எதிரிவிமானங்களை தனியாக அடையாளம் காணும் திறனும் இந்த வகை ஆயுதங்களிற்கு உள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உ.பி. வாராணசி தொகுதியில் பிரதமர் மோடியை...

2024-04-10 11:28:47
news-image

காசா விவகாரத்தில் இஸ்ரேலிய பிரதமர் தவறிழைக்கின்றார்...

2024-04-10 10:50:59
news-image

பாலஸ்தீன தேசத்தை அங்கீகரிக்க தயார் -...

2024-04-10 10:13:28
news-image

மோடி மீண்டும் பிரதமராக காளிக்கு ரத்த...

2024-04-09 14:59:35
news-image

எனது வீடு எங்கே? ; கான்...

2024-04-09 12:39:53
news-image

சென்னை | இயக்குநர் அமீர், ஜாபர்...

2024-04-09 09:53:54
news-image

காஸா யுத்தம்: ஜேர்மனிக்கு எதிராக சர்வதேச...

2024-04-08 18:33:59
news-image

“இலங்கையில் தமிழர்களை கொன்றது காங்கிரஸ், உடனிருந்தது...

2024-04-08 14:40:35
news-image

சீன எல்லை பிரச்சினையைப் பேசியதால் கச்சத்தீவு...

2024-04-08 14:16:24
news-image

ரஃபாவில் இராணுவ நடவடிக்கைக்கு இஸ்ரேல் தயாராகுகிறது

2024-04-08 13:20:34
news-image

மனிதாபிமான பணியாளர்கள் படுகொலை : உரிய...

2024-04-08 12:54:31
news-image

சாம்பல் மேடாக காணப்படுகின்றது காசாவின் மிகப்பெரிய...

2024-04-08 12:04:33