படுக்கையறையில் தஞ்சம் புகுந்த புலி - நடந்தது என்ன?

Published By: Rajeeban

19 Jul, 2019 | 03:48 PM
image

மழை காரணமாக காட்டிலிருந்து வெளியேறிய புலி வீடொன்றின் கட்டிலில் தஞ்சம் புகுந்த சம்பவம் இந்தியாவின் அசாம் மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.

கடந்த ஒரு வாரகாலத்திற்கு மேல் கடும் மழையை எதிர்கொண்டுள்ள  அசாமை சேர்ந்த குடும்பத்தினர் தங்கள் கட்டிலில் புலி அமர்ந்திருப்பதை பார்த்து அச்சமடைந்ததாக தெரிவித்துள்ளனர்.

புலி கட்டிலில் அமர்ந்திருக்கும் படத்தை இந்தியாவின் வனவிலங்கு அமைப்பொன்று வெளியிட்டுள்ளது.

அசாமின் ஹர்முட்டி கிராமத்தின் வீட்டொன்றின் கட்டிலில் புலி அமர்ந்திருப்பதை அந்த படத்தில் காணமுடிகின்றது.

மழை காரணமாக அருகிலுள்ள கஜிரங்கா தேசிய பூங்காவிலிருந்து புலி வெளியேறியிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அசாமில் மழை காரணமாக கிராமங்களிற்குள் வழமைக்கு மாறான விருந்தாளிகள் வருவது வழமை என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

குறிப்பிட்ட புலியை அந்த வீட்டிலிருந்து அகற்றுவதற்கான முயற்சிகள் இடம்பெறுவதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இதேவேளை புலி தானாகவே வெளியேறிவிட்டது என மற்றொரு அதிகாரி டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

கடும்மழை காரணமாக புலி மாத்திரம் கிராமத்திற்குள் வரவில்லை மான்கள் யானைகள் உட்பட பல மிருகங்கள் வந்துள்ளன என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கஜரங்கா தேசிய பூங்காவின் பெரும் பகுதி மழையால் பாதிக்கப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காண்டாமிருகமொன்று வெள்ளத்திலிருந்து தப்பிக்க முயல்வதை காண்பிக்கும் படத்தையும் அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.

கடந்த ஒரு வார காலத்தில் பூங்காவில் 83 விலங்குகள் உயிரிழந்துள்ளன எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வடக்கு மசெடோனியாவில் இரவு விடுதியில் தீ...

2025-03-16 14:34:32
news-image

பலநாடுகளிற்கு எதிராக போக்குவரத்து தடை -...

2025-03-16 12:43:01
news-image

“உங்கள் இந்தி மொழியை எங்கள் மீது...

2025-03-16 11:53:38
news-image

பத்திரிகையாளர்கள் நிவாரண பணியாளர்கள் மீது இஸ்ரேல்...

2025-03-16 10:47:17
news-image

ஹெளத்தி கிளர்ச்சியாளர்களின் நிலைகள் மீது அமெரிக்கா...

2025-03-16 07:38:57
news-image

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன்னிலையில் வீடியோ...

2025-03-15 12:07:55
news-image

பங்களாதேஷில் 8 வயது சிறுமி பாலியல்...

2025-03-14 15:44:10
news-image

பனாமா கால்வாயை முழுமையான கட்டுப்பாட்டின் கீழ்...

2025-03-14 14:33:13
news-image

பாலஸ்தீன மக்கள் மீது ஆதிக்கம் செலுத்தி...

2025-03-14 13:56:27
news-image

போர் நிறுத்தத்துக்கு ஒப்புக் கொள்கிறோம் ஆனால்.....

2025-03-14 13:24:45
news-image

புகையிரதத்தின் மீது பிரிவினைவாதிகளின் தாக்குதலிற்கு இந்தியா...

2025-03-14 12:53:23
news-image

டென்வர் விமானநிலையத்தில் அமெரிக்க எயர்லைன்ஸ் விமானத்தில்...

2025-03-14 10:20:32