இந்திய அணியின் முன்னாள் தலைவர் எம்எஸ் டோனி இளம் வீரர்களிற்கு வழிவிடவேண்டும் என மற்றொரு முன்னாள் வீரரான கவுதம் கம்பீர் கருத்து வெளியிட்டுள்ளார்.

2023 உலக கிண்ணப்போட்டிகளை அடிப்படையாக வைத்து இளம்வீரர்கள் குறித்து கவனம் செலுத்தவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

டோனி தனது காலத்தில் எப்படி சிரேஸ்ட வீரர்கள் ஓய்வு பெறுவதை திட்டமிட்ட முறையில் முன்னெடுத்தாரோ அதேபோன்று இளம் விக்கெட் காப்பாளர்கள் மூவரிற்கு சந்தர்ப்பம் வழங்கவேண்டும் அவர்களை மேற்கிந்திய அணியுடனான தொடரில் சேர்த்துக்கொள்ளவேண்டும் என கம்பீர் தெரிவித்துள்ளார்.

 பந்த்- சஞ்சுசாம்சன்- இசான் கிசான் போன்ற இளம்வீரர்களிற்கு இந்தியா வாய்ப்பை வழங்கலாம்   என தெரிவித்துள்ள கம்பீர் எவருக்கு திறமையிருந்தாலும் அவரை விக்கெட் காப்பாளராக  தெரிவு செய்யவேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

டோனி அணித்தலைவராகயிருந்தவேளை எதிர்கால வீரர்களில் கவனம் செலுத்தினார்,ஒரு கட்டத்தில் அடுத்த உலக கிண்ண போட்டிக்கு இளம் வீரர்கள் அவசியம் என அவர் கருதினார் என தெரிவித்துள்ள கம்பீர் உணர்ச்சிவசப்பட்டு முடிவுகளை எடுப்பதை விட யதார்த்தபூர்வமான முடிவுகளை எடுக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.