கொக்குத்தொடுவாய் மக்களின் மானாவாரி வயல் நிலங்களை ஆக்கிரமிக்கும் வனஜீவராசிகள் திணைக்களம் !

Published By: Daya

19 Jul, 2019 | 02:38 PM
image

முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைக்கிராமங்களில் ஒன்றான கொக்குத்தொடுவாய் கிராம மக்களின் ஒருதொகுதி மானாவாரி பயிர்ச்செய்கை காணிகளை வனஜீவராசிகள் திணைக்களம் அபகரித்துள்ளதாக கொக்குத்தொடுவாய் மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

கொக்குத்தொடுவாய் கிராம மக்களுக்கு சொந்தமான ஆங்கிலேயர் காலத்து உறுதிக் காணிகளான மேட்டு மானாவாரி பயிர் செய்கை இடங்களான வெள்ளை கல்லடி ,தீமுந்தல் ,குஞ்சுக்கால்வெளி ,கோட்டைக்கேணி போன்ற பயிர்ச்செய்கை நிலங்களை கொக்கிளாய் சரணாலயம் என்னும் பெயரில் வனஜீவராசிகள் திணைக்களம் புதிதாக பெயர் பலகைகளை நாட்டி அபகரித்துள்ளதாக கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர் .

வனஜீவராசிகள் திணைக்களத்தின் இந்த நில அபகரிப்பு தொடர்பில் கருத்து தெரிவித்த கொக்குத்தொடுவாய் வட்டாரத்தின் கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் சிவலிங்கம் ,

1984ஆம் ஆண்டு திட்டமிட்டு சிங்கள காடையர்களால் விரட்டியடிக்கப்பட்ட எமது  கிராமம் இடம்பெயர செய்யப்பட்டது. அதன் பின்னர் வெலிஓயா என்னும் பெயரில் மகாவலி எல் வலயம் உருவாக்கப்பட்டு எமது 1036 ஏக்கர் குளக் காணிகளை அபகரித்து சிங்கள மக்களுக்கு வழங்கியுள்ளார்கள் .

குறித்த குளக்காணிகளை  பறித்தது மட்டுமல்லாது தற்போது நாங்கள் தற்போது விவசாயம் செய்துவரும் மானாவரி நிலங்களான வெள்ளை கல்லடி ,தீமுந்தல் ,குஞ்சுக்கால்வெளி ,கோட்டைக்கேணி போன்ற வயல்நிலங்களை எம்மை வயல் செய்யவிடாது வனஜீவராசிகள் திணைக்களம் எல்லை கற்களை நாட்டியும்  பெயர்ப்பலகைகளை நாட்டியும்  பல நிப்பந்தனைகளை  விதித்து அபகரித்துள்ளது .

வனஜீவராசிகள் திணைக்களத்தின் பறவைகள் சரணாலயம் கொக்குளாய் பகுதியிலேயே இருக்கின்றது .ஆனால் கொக்குளாயிலிருந்து 10 கிலோமீற்றர்கள் தொலைவிலிருக்கின்ற எமது வயல்நிலங்களை நோக்கி வனஜீவராசிகள் திணைக்களம் தற்போது வந்திருக்கின்றது . நாங்கள் சிங்கள மக்களுடன் சுமுகமாக வாழவேண்டும் என்றுதான் விரும்பித்தான் நாங்கள் இவ்வளவு சம்பவங்கள் நடந்தும் அமைதியாக இருக்கின்றோம் . இவர்கள் எமது குளக்காணிகளை பிடித்தது மட்டுமல்லாது எஞ்சியுள்ள எமது மேட்டு பயிர்ச்செய்கை நிலங்களையும் அபகரித்தால் நாம் என்ன செய்வது ? எமது மக்கள் மீண்டும் இடம்பெயரவேண்டிய சூழல் தான் ஏற்பட்டுள்ளது .

நாம் எமது சொந்த கிராமங்களை  விட்டு இடம்பெயர்ந்து 35 வருடங்களுக்கு பின்னர் 2012 ஆண்டு மீண்டும் எமது நிலங்களுக்கு திரும்பி சென்று பார்த்தபொழுது எமது குளங்களான ஆமையன்குளம் , உந்தராஜன்குளம் ,ஊரடிக்குளம் ஆகிய குளங்களும்  குளத்தின் கீழான வயல் நிலங்களுக்கும் சிங்களவர்களால் பறிக்கப்பட்டிருந்தது.

 தற்போது  எம்மிடம் எஞ்சியிருக்கும் மானாவாரி காணிகளையும் பறித்தால் எமது மக்கள் என்ன செய்வது ? எங்கே போவது? தற்போது எமது நிலங்களில் எந்தவிதமான முன்னேற்றங்களிலும் ஈடுபடமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது . எமது நிலங்களை திட்டமிட்டு இவ்வாறான   திணைக்களங்கள்  அபகரித்து வருகின்றது .  இந்த நிலை தொடர்ந்தால் நாம் ஜனநாயக வழியில்  மாபெரும் போராட்டத்துக்கு தயாராகவேண்டிய சூழல் ஏற்படும் என தெரிவித்தனர் .

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17
news-image

கடற்றொழிலாளர்களுக்கான புதிய சட்டமூல வரைபு தொடர்பாக...

2024-04-20 00:08:11