பயங்கரவாதிகளின் தற்கொலைக் குண்டுத் தாக்குதலுக்கு இலக்கான நீர்கொழும்பு, கட்டுவாப்பிட்டிய தேவாலயம் எதிர்வரும் 21 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த ஏப்பரல் மாதம் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று பயங்கரவாதிகளினால் தற்கொலைத் தாக்குதல் நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டிய சென்.செபஸ்தியன் தேவாலயம் இடம்பெற்றதில் சுமார் 80 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்ததுடன் பலர் காயமடைந்தனர்.

இந்நிலையில் தாக்குதல் இடம்பெற்று எதிர்வரும் 21 ஆம் திகதி 3 மாதங்கள் ஆகின்ற நிலையில் குறித்த ஆலயம் மத வழிபாட்டுக்காக மீண்டும் திறக்கப்படவுள்ளது.

குறித்த ஆலய புனரமைப்புப் பணிகள் இடம்பெற்றுவந்திருந்த நிலையில் மக்கள் வழிபாட்டுக்காக மீண்டும் திறக்கப்படவுள்ளது.

.