பேஸ் அப் செயலி குறித்து விசாரணை அவசியம் - அமெரிக்கா

Published By: Digital Desk 3

19 Jul, 2019 | 01:18 PM
image

சமூக வலைதளங்களில் வைரலாகிவரும் பேஸ் அப் செயலியில், பயன்படுத்துபவர்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதால் எப்.பி.ஐ புலனாய்வு பிரிவினர் இதுகுறித்து ஆய்வு மேற்கொள்ளவேண்டும் என அமெரிக்க செனட் சபையின் சிறுபான்மை தலைவர் சக் ஷுமர்  தெரிவித்துள்ளார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் சமூக வலைதளங்களில் கவனம் பெற்ற பேஸ் அப் எனும் செயலி, சமூக வலைதள பயன்பாட்டாளர்கள் மத்தியில் தற்போது மீண்டும் வைரலாகியுள்ளது.

சமகால புகைப்படங்களை வயதான தோற்றத்திலும் இளமையான தோற்றத்திலும் இந்த செயலி உடனுக்குடன் மாற்றிக்காட்டுவதால் இதைப் பயன்படுத்தும் பயனர்களிடையே அமோக வரவேற்பு பெற்றுள்ளது.

இந்நிலையில் இச்செயலி குறித்து கருத்து தெரிவித்துள்ள ஜனநாயக கட்சியைச் சேர்ந்தவரும், அமெரிக்காவின் செனட் சபை சிறுபான்மை தலைவருமான சக் ஷுமர் , பேஸ் அப் செயலியால் தனி நபர் தகவல்கள் திருடப்படும் அபாயம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

ரஷ்ய தயாரிப்பான இந்த செயலியை அமெரிக்காவைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் பயன்படுத்துவதால் தேசப் பாதுகாப்பிற்கும்கூட அச்சுறுத்தல் இருப்பதாக தெரிவித்துள்ள அவர், இந்த செயலி குறித்து எப்.பி.ஐ புலனாய்வு பிரிவு மற்றும் எப்.டி.சி ஆகியவை முறைப்படி ஆய்வு மேற்கொள்ளவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மனித உரிமைகளை வலுப்படுத்த விரும்பும் இளைஞர்களின்...

2024-03-18 16:04:18
news-image

சமாதானத்தை ஜனநாயகத்தை வலுப்படுத்துவதில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தினையும்...

2024-03-18 11:46:14
news-image

செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தும்போது ஒழுக்கவியல் சார்ந்த...

2024-03-15 15:43:14
news-image

டிக்டொக்கை பின்னுக்குத் தள்ளிய இன்ஸ்டாகிராம்

2024-03-11 10:13:06
news-image

மனித மூளையில் ‘சிப்’ ; எலான்...

2024-01-30 13:16:57
news-image

“மூன் ஸ்னைப்பர்” வெற்றிகரமாக தரையிறங்கியது :...

2024-01-19 21:59:46
news-image

எதிர்காலத்தை ஆளப்போகும் செயற்கைநுண்ணறிவு

2023-11-22 15:47:57
news-image

வட்ஸ் அப்பில் ஒரே நேரத்தில் இரண்டு...

2023-10-21 12:02:07
news-image

ஸ்னாப் செட்டின் புதிய செயற்கை நுண்ணறிவு...

2023-10-07 11:02:07
news-image

கூகுளுக்கு இன்று வயது 25

2023-09-27 10:36:57
news-image

ஏகத்துவத்தை நோக்கி தொழில்நுட்பத்தில் வேகமாக மாற்றமுறும் ...

2023-09-22 18:33:26
news-image

சமூக வழிகாட்டுதல்கள் பற்றிய விழிப்புணர்வை இலங்கையில்...

2023-08-28 20:48:26