முஸ்லிம்களின் பேரம்­பே­சலை பறித்­தெ­டுக்கும் தேர­வாத வியூகம்

Published By: R. Kalaichelvan

19 Jul, 2019 | 12:54 PM
image

முஸ்லிம் சமூ­கத்தின் கூட்­டுப்­பொ­றுப்பை உணர்த்தி பதவி வில­கிய முஸ்லிம் அமைச்­சர்கள், எதைச் சாதித்­தனர், இந்­தப்­ப­தவி விலகல் உணர்த்­திய செய்­திகள் என்ன? இந்தக் கேள்­வி­களின் எதி­ரொ­லி­களே முஸ்லிம் அர­சியல் களத்தின் எதிர்­கால நகர்­வு­களைக் கட்­டியங் கூறப் போகின்­றன முஸ்லிம் பெயர்­தாங்­கிய ஒரு சில இளை­ஞர்­களின் பயங்­க­ர­வாதச் செயற்­பா­டு­களை ஒட்­டு­மொத்­த­மாக முஸ்லிம் சமூ­கத்தின் மீது திணிக்க முயன்ற, தேர­வா­தி­களின் பிர­யத்­த­னங்­களை, இப்­ப­தவி வில­கல்­களால் முறி­ய­டிக்க முடிந்­ததை மட்டும் எல்­லோரும் ஏற்றுக் கொண்­டே­யாக வேண்டும்.

முஸ்லிம் எம்­.பி.க்­களை மீண்டும் அமைச்­ச­ர­வைக்குள் உள்­வாங்கும் அரச உயர் மட்­டத்தின் முயற்­சிகள் இத­னையே உணர்த்­து­கின்­றன.  எதிர்­வரும் தேர்­தல்­களில் முஸ்லிம் பிர­தே­சங்­களில் காலூன்­று­வ­தற்கு அரச தரப்பு எடுக்கும் இர­க­சிய இரா­ஜ­தந்­தி­ரங்­களும் இந்த முயற்­சிக்குள் உள்­ளன. கண்டி, போகம்­பரை மைதா­னங்­களில் வானு­யர எழுந்த முஸ்லிம் விரோ­தக்­கு­ரல்­க­ளுக்கு பிர­தமர் உட்­பட அர­சாங்­கத்தின் முக்­கிய தரப்­புக்கள் பதி­ல­ளிக்­கா­ததை சந்­தே­கத்­துடன் நோக்­கிய முஸ்­லிம்கள் நிதான போக்­குள்ள தேசிய கட்­சி­களின் தலை­மை­களே ஆட்சி அதி­கா­ரத்­துக்கு வர வேண்­டு­மெ­னவும் விரும்­பு­கின்­றனர். தேர  வாதத்­துக்கு  துணை­போகும் தலை­மை­களில் அவர்கள் நாட்டம் காட்­ட­வில்லை என்­பதும் தெளி­வு­ப­டு­கி­றது 

இன்னும் சில காலத்­துக்கு தங்கள் தலை­மைகள் அமைச்சுப் பொறுப்­புக்­களை ஏற்­காது கூட்டுப் பொறுப்பைப் பேணினால் இன­வா­தத்­துக்கு தலை­சாய்க்கும் தேசிய கட்­சி­களின் பாரம்­ப­ரி­யங்­களை இல்­லாமல் செய்­து­வி­டலாம்.எனவே அமைச்சுப் பொறுப்­புக்கள் தற்­போ­தைக்கு தேவை­யில்லை எனவும் முஸ்லிம் அர­சியல் தளத்தில் பேசப்­ப­டு­கி­றது.இன, மத, சமூ­கங்­களின் அபி­லா­ஷை­க­ளுக்கு குறுக்­காக நிற்கும் எந்தக் கோரிக்­கை­க­ளையும் ரணில் தலை­மை­யி­லான ஐக்­கிய தேசிய கட்சி ஏற்றுக் கொண்­ட­தில்லை.ரணிலின் தலை­மைக்கு முன்னர், நடந்த சில சம்­ப­வங்­க­ளாலே, ஐ.தே.கவும் பௌத்த தேசி­ய­வாதத் தலை­மை­யாகப் பார்க்­கப்­பட்­டது.

இந்­தப்­பார்­வை­களை படிப்­ப­டி­யாக தாரா­ள­வாதப் பக்கம் திசை­தி­ருப்­பி­யது ரணிலின் தலை­மையே! இத­னாலே தெற்கில் ஆழக்­கா­லூன்ற ஐ.தே.வுக்கு முடி­யா­துள்­ளது. இத­னால்தான் ராஜ­ப­க் ஷக்­க­ளுக்கு நிக­ராக, சிங்­கள பௌத்த வாக்­கு­களைப் பெறும் நோக்­குள்ள சிலர், ரணிலின் தலை­மையை மாற்றக் கோரு­கின்­றனர். இச்­சிந்­த­னை­களின் ஏணிப்­ப­டி­க­ளி­லி­ருந்தே சிறு­பான்­மை­யினர், குறிப்­பாக முஸ்­லிம்கள் அடுத்த அர­சாங்­கத்தை தெரி­வ­தற்­கான நகர்­வு­களில் இறங்க வேண்டும். கட்­சி­க­ளல்ல இங்கு பிர­தானம். கட்­சி­களின் தலை­மை­களைப் புடம்­போ­டு­வதில் தருணம் தப்­பாத சிந்­த­னையே எமது தலை­மை­க­ளுக்கு அவ­சியம். உண்­மையில் ஜன­நா­ய­க­வாதத் தாராள சிந்­த­னையால் ஆட்­சி­களைப் பிடிக்கும் பல சந்­தர்ப்­பங்­களை ரணில் தவ­றி­யி­ருந்­தாலும் தனது அர­சியல் முத­லீ­டு­களில் கடும்­போக்­கு­வாதம், இன­வாதம், தேர­வா­தத்தை அவர் வைப்­பி­லிட்­ட­தில்லை.

ஈஸ்டர் தாக்­கு­த­லுக்குப் பின்னர் கிளம்­பி­யுள்ள ஓர­வஞ்­சனைச் சமாந்­த­ரங்கள், சித்­தாந்­தங்­களை முறி­ய­டிக்கப் பொருத்­த­மான ஆளு­மையை ஓர­ள­வுக்­கா­வது முஸ்­லிம்­களும் முஸ்லிம் தலை­மை­களும் அடை­யாளம் கண்­டுள்­ளன. அர­சுக்கு எதி­ரான சகல பிரே­ர­ணை­களும் தோற்­க­டிக்­கப்­பட்­டதும் இந்­தப்­புரிதல்­க­ளில்தான்.இத­னால்தான் சிறு­பான்­மை­யி­னரின் வாக்­குகள் ஐக்­கிய தேசிய கட்­சிக்கு கிடைப்­பதைத் தடுக்கும் தூர­நோக்குச் சிந்­த­னைகள் படிப்­ப­டி­யாக பல விஸ்­வ­ரூ­பங்­களில் வெளிப்­ப­டு­கின்­றன.  இக் காலத்தில் முஸ்லிம் எம்.­பி.க்கள் மிக விழிப்­புடன் செயற்­ப­டு­வது பாராட்­டுக்­கு­ரி­யது. முஸ்லிம் எம்­.பி.க்­களை அமைச்­சுப்­ப­த­வி­களை எடுக்­க­வி­டாமல் தடுப்­ப­த­னூ­டாக, அடிப்­ப­டை­வா­தத்தின் சாயல்கள் இன்னும் வீழ­வில்­லை­யென்ற விம்­பத்தைக் காட்­டு­வதும், முஸ்லிம் பிர­தே­சங்­களில் ஐக்­கிய தேசிய கட்சித் தலை­மைகள் இல­கு­வாக நுழை­வதைத் தடுக்­க­வுமே, இந்தக் கோஷங்கள் தலை­யெ­டுக்­கின்­றன.

இல்­லா­விட்டால் எதற்கு இப்­போதும் ரிஷாத் பதி­யுதீன் மீது விரல்கள் நீட்­டப்­பட வேண்டும்? ஈஸ்டர் தினத்­தாக்­கு­த­லுக்குப் பின்னர்   ரிஷாத்தின் மீது   முந்­நூறு  குற்­றச்­சாட்­டுக்­களை சுமத்­திய கடும்­போக்­கர்கள் இன்னும் ஓய்ந்­த­பா­டில்லை.  தாக்­குதல் நடந்து மூன்று மாதங்­க­ளா­கி­விட்­டன. ஒரு நாளைக்கு ஒரு குற்­றச்­சாட்டை முன்­வைத்­தாலும் தொண்­ணூறு குற்­றங்­க­ளுக்கே சாத்­தியம். மூன்று மாதத்தில் முந்­நூறு குற்­ற­மென்றால் ஒரு மாதத்­துக்கு நூறு குற்­றங்கள்."சைபர்" குற்­றங்­களைச் செய்­வ­தற்கும் (இணைய குற்றம்) இக்­கால இடை­வெளிகள் சந்­தர்ப்­ப­ம­ளிக்­காது. இவர்­களின் கோரிக்­கைகள், குற்­றச்­சாட்­டுக்­க­ளுக்கு அஞ்சி, அமைச்சுப் பத­வி­களைப் புறந்­தள்­ளு­வது முஸ்லிம் சமூ­கத்தின் பேரம்­பேசலை கடும்­போக்­கர்­க­ளுக்கு கைய­ளித்­த­தா­கி­விடும். இதுவே மீண்டும் அமைச்­சுக்­களைப்  பொறுப்­பேற்கத் தூண்­டு­கின்­றது.

இன்­றுள்ள நிலை­மை­களில் பிர­தேச அபி­வி­ருத்­தி­களைத் துரி­தப்­ப­டுத்தி வாக்­கா­ளர்­களைத் தக்­க­வைக்க முடி­யுமா? என்றும் சிலர் சிந்­திக்­கலாம். “கடும்­போக்­கர்­க­ளுக்கு அர­சாங்கம் அஞ்­ச­வில்லை, முஸ்­லிம்கள் இணங்­க­வில்லை” என்­பதை வெளிப்­ப­டுத்­து­வ­தற்கே அமைச்­சுக்­களைப் பொறுப்­பேற்க வேண்டி உள்­ளது.இல்­லா­விட்டால் தேர­வா­தமும், கடும்­போக்கும் சிறு­பான்­மை­யி­னரின் பேரம்­பே­சலைக் கையி­லெ­டுத்த கதை­யாகி நிலை­மைகள் குரங்கு ஆப்­பி­ழுத்த கதை­யாக நேரி­டலாம்.

கல்­முனை உள்­ளிட்ட தமிழ் முஸ்லிம் சமூ­கங்கள் முரண்­படும் விட­யங்­க­ளுக்­கான தீர்வை தேர­வா­தத்­துக்குத் துணை­போகும் தலை­மை­க­ளிடம் எதிர்­பார்த்து சிறு­பான்மைத் தலை­மைகள்,ஏட்­டிக்குப் போட்­டி­யான காய்­களை நகர்த்­து­வது,எமது அபி­லா­ஷை­களை எடுப்பார் கைப்­பிள்­ளை­யாக்கி விடும்.சிறு­பான்­மை­யி­னரின் உரி­மை­க­ளுக்கு தேர­வா­தத்தில் தீர்­வு­கிட்­டா­தென்ற தெளி­வு­க­ளூ­டா­கவே, உள்­ளக நிர்­வாக முரண்­பா­டுகள் தீர்க்­கப்­பட வேண்­டி­யுள்­ளது

தற்­போது பர­வ­லாகப் பேசப்­படும் முஸ்லிம் விவாகச் சட்டம் மெது­மை­யான கோணத்தில் ஆரா­யப்­ப­டு­வ­தற்கு இட­ம­ளித்­ததும் ரணிலின் தாராண்­மை­வா­தம்தான். இஸ்­ரேலை வர­வ­ழைத்த ஜே.ஆர். ஜெய­வர்­தன, வடக்கு, கிழக்கு மாகா­ணங்­களை இரண்டு வரு­டங்கள், தாரை­வார்த்த பிரே­ம­தாச ஆகி­யோரின் நேர்­கோ­ண­லான சிந்­த­னைக்கு இட­ம­ளித்­தி­ருந்தால் ரணி­லாலும் தெற்கில் நிலைப்­பட்­டி­ருக்க முடியும்.

2002 முதல் 2004 வரை, ரணிலும் இதே தவறைச் செய்­த­தாக சிலர் வாதிட்­டாலும் வெளிநா­டு­களின் கண்­கா­ணிப்­புக்குள் அந்த அரசு இருந்­ததால் எழு­மாந்­த­மாக அவர்­களால் செயற்­பட முடி­ய­வில்லை. முடிந்­தாலும் அவர்­களால் நிலைக்க இய­ல­வில்லை. இந்­தக்­கா­லப்­ப­கு­தியில் இவர்கள் நடந்து கொண்ட முறைகள், வடக்கு கிழக்கில் தனி இராச்­சியம் கோரிய ஆயு­த­தா­ரி­களின் மன நிலை­களைப் புரிந்து கொள்ள உதவியது. இதன்பின்னர்தான் ரணிலின் ராஜதந்திரங்களைச் சிலர் கண்டுகொண்டனர். 

ஐக்கிய தேசிய கட்சியின் சாரதியாக ரணில் இருக்கும் வரை முஸ்லிம்கள் அந்த பஸ் வண்டியில் பயணிக்கக் கூடாதென மு.கா, தலைவர் அஷ்ரப் ஏன் சொல்லியிருப்பார் என்பதையே இப்போது ஆராய வேண்டி­யுள்ளது. இருபது வருடங்களாக ஐக்கிய தேசியக் கட்சியில் ஒன்றித்திருந்த  தெற்கு முஸ்லிம்களைத் தனித்துவக் கட்சியில் ஈர்ப்பதற்கு வேறு வழியின்றியே இந்தத் தாரக மந்திரத்தை அஷ்ரப் பாவித்திருப்பார்.கிழக்கு முஸ்லிம்களை தனது முழுமையான கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடிந்தாலும் தெற்குத் தளம்   அஷ்ரபுக்கு ஒரு சவாலாக இருந்ததாலேயே இந்தத் தாரக மந்திரம் பாவிக்கப்பட்டதோ தெரியாது. அரசியல் சிந்தனைகள் காலவோட்டத்துக்கு ஏற்ப மாறவேண்டுமே தவிர, வேத வாக்குகளல்ல.

- சுஐப் எம் காசிம்-

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மத்திய கிழக்கு புவிசார் அரசியலில் ஈரானின்...

2024-04-19 18:33:36
news-image

எல்லா காலத்துக்கும் மிகவும் முக்கியமான ஒரு...

2024-04-19 14:59:40
news-image

கச்சதீவை வைத்து அரசியல் செய்யாதீர்கள்

2024-04-19 14:37:29
news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13