ஈழத்து இந்துக் கோயில்­களின்  தொன்மை குறித்த ஆய்வு மாநாடு

Published By: Daya

19 Jul, 2019 | 12:54 PM
image

தேசிய ஒரு­மைப்­பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்­பாடு மற்றும் இந்து சமய, விவ­கார அமைச்சின் வழி­காட்­டலில் இயங்கும் இந்து சமய, கலா­சார அலு­வல்கள் திணைக்­க­ளத்தின் இவ்­வ­ரு­டத்­திற்­கான ஆய்வு மாநாடு “இரு­பதாம் நூற்­றாண்­டுக்கு முற்­பட்ட ஈழத்து இந்­துக்­கோ­யில்கள் – தொல்­பொ­ருட்­களும் இலக்­கிய மர­பு­களும்” எனும் தொனிப்­பொ­ருளில் எதிர்­வரும் ஒக்­டோபர் மாதம் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ளது.


இந்து சம­யத்தைப் பொறுத்­த­வ­ரையில் கோயில்கள் பிர­தான இடம் வகிப்­பன. இந்து கலா­சாரம் கோயிலை மையப்­ப­டுத்­திய கலா­சா­ர­மா­கவே விளங்­கு­கின்­றது. அழிந்­த­னவும் அழி­யா­த­ன­வுமாய் விளங்கும் கோயில்கள் பற்றித் தொல்­பொ­ருட்கள், இலக்­கிய மர­பு­க­ளி­ன­டி­யாகச் செவ்­வை­யான முறையில் ஆராய வேண்­டி­யதும் அந்த ஆராய்ச்­சியின் முடி­வு­களை ஒழுங்­காகப் பதி­வு­செய்ய வேண்­டி­யதும் நமது பிர­தான கட­மைகள் என்­பதைச் சம­கால இலங்­கையின் சமூக அர­சியல் நிலை­மைகள் எமக்குத் துலாம்­ப­ர­மாக உணர்த்தி நிற்­கின்­றன. ஈழத்தில் இந்து சம­யத்தின் தொன்­மை­யையும் அங்கு அது பெற்­றி­ருந்த செல்­வாக்­கையும் உணர்த்­து­வ­ன­வாக அமை­கின்ற இந்­துக்­கோ­யில்­களை அவற்றின் வர­லாற்றுப் பெரு­மை­யோடு சான்­று­களின் ஊடாக மீட்­டெ­டுப்­பதே இந்த ஆய்வு மாநாட்டின் பிர­தான நோக்­க­மாகும்.


பூர்­வீகக் காலம் முத­லாக இலங்­கையில் இந்து சமயம் நில­வி­வ­ரு­கி­றது. அது இந்­துக்­க­ளது நம்­பிக்­கையில் மாத்­தி­ர­மன்றிச் சிங்­கள பௌத்த மக்­க­ளது நம்­பிக்­கை­யிலும் நிலை­பெற்று வந்­துள்­ளது. இன்றும் நிலை­கொண்­டுள்­ளது. திருக்­கே­தீஸ்­வரம், திருக்­கோ­ணேஸ்­வரம், கதிர்­காமம் முத­லான தலங்கள் கடல் கடந்து பர­விய பெருமை உடை­ய­னவாய்த் திகழ்ந்­தன. காலத்­துக்குக் காலம் அரி­ய­ணை­யே­றிய சிங்­கள, தமிழ் அர­சர்கள் புதி­ய­ன­வாகப் பல ஆல­யங்­க­ளையும் சதுர்­வேதி மங்­கலம் முத­லா­ன­வற்­றையும் நிறுவி அவற்றின் பிர­பா­ல­னத்தின் பொருட்டு மானி­யங்­க­ளையும் வழங்­கி­னார்கள். அநு­ரா­த­புரம், பொலன்­ன­றுவை, யாழ்ப்­பாணம், கோட்டை முத­லான இரா­ச­தா­னி­களில் அவ்­வாறு நிறு­வப்­பட்ட கோயில்கள் பல கில­ம­டைந்­து­விட்­டன.

தொல்­பொருட் சின்­னங்­க­ளூ­டா­கவே அவற்றின் பெரு­மை­யையும் வர­லாற்­றையும் மீட்­டெ­டுக்க வேண்­டிய நிலை ஏற்­பட்­டுள்­ளது. ஈழத்து இந்­துக்­கோ­யில்­களுள் பல தமக்­கான இலக்­கி­யங்­க­ளையும் பெற்று விளங்­கி­யுள்­ளன. அவ்­வா­றான இலக்­கியச் சிறப்­புற்ற கோயில்கள் கூடச் சில இன்று மண்­மே­டா­கவும் காடு­மண்­டியும் காட்­சி­ய­ளிக்­கின்­றன. அத்­தகு கோயில்­களை அந்த இலக்­கி­யங்­க­ளூ­டா­கவே மீட்­டெ­டுக்­கக்­கூ­டி­ய­தா­யுள்­ளது. எனினும் பல கோயில்கள் முற்­கா­லத்தில் போலவே இன்றும் பேரோடும் புக­ழோடும் வழி­பாட்டு நடை­மு­றை­க­ளோடும் நிலை­பெற்­றுள்­ளன.


இத்­தகு நிலையில் “இரு­பதாம் நூற்­றாண்­டுக்கு முற்­பட்ட ஈழத்து இந்துக் கோயில்­கள்–­தொல்­பொ­ருட்­களும் இலக்­கிய மர­பு­களும்” என்ற ஆய்­வுப்­பொ­ருண்­மையில் தொல்­பொருட் சின்­னங்கள், சாச­னங்கள், தமிழ், சிங்­கள, சமஸ்­கி­ருத, பாளி இலக்­கிய மர­புகள் மற்றும் வெளி­நாட்­ட­வர்கள் எழு­தி­வைத்த குறிப்­புக்கள் போன்­ற­வற்றை ஆய்வு மூலா­தா­ரங்­க­ளாகக் கொண்டு ஆய்வுக் கட்­டுரை சமர்ப்­பிக்க விரும்­பு­ப­வர்கள் எதிர்­வரும் ஆகஸ்ட் மாதம் பதி­னைந்தாம் திக­திக்கு முன்­ப­தாகத் தங்­களின் ஆய்வுக் கட்­டு­ரை­களைப் “பணிப்­பாளர், இந்து சமய, கலா­சார அலு­வல்கள் திணைக்­களம், இல. 248 1/1, காலி வீதி, கொழும்பு– 4” என்னும் முக­வ­ரிக்குப் பதிவுத் தபா­லிலோ அல்­லது hindudir@gmail.com என்ற மின்­னஞ்சல் முக­வ­ரிக்கோ அனுப்பி வைக்­கலாம்.


கட்­டுரை சமர்ப்­பிக்கும் ஆய்வாளர்கள் தமிழில் பன்னிரண்டு புள்ளியளவில் A4 அளவு தாளில் எட்டுப்பக்கங்களுக்கு மேற்படாமல் மேற்கோள், குறிப்புப்பட்டியல், உசாத்துணை நூற்பட்டியல், கட்டுரைச் சுருக்கம், கட்டுரையாளர் விபரம், மின்னஞ்சல் முகவரி என்பவற்றுடன் அனுப்பி வைக்க வேண்டும் என இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிரித்தானிய மக்களை கண்ணீர் சிந்தவைத்த இளவரசி...

2024-03-29 13:17:06
news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54